தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பிற்கு ரத்த தான சேவைக்கான பாராட்டு சான்று வழங்கப்பட்டது.
தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சமூக அமைப்புகளின் பங்களிப்புடன் ரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தவகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் நோயாளிகள் நலன் பாதுகாத்திடும் பொருட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுதந்திரதினம், குடியரசு தினம் போன்ற முக்கியமான நாட்களில் அதிகப்படியான ரத்ததான முகாம்களை நடத்தி உயிர்காக்கும் பணிக்கு அதிகளவில் ரத்தம் பெற்றுக்கொடுத்து உதவியதற்காக தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பிற்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உதவி பேராசிரியர் டாக்டர்.ராகேஷ், ரத்த வங்கி மேலாளர் டாக்டர்.சாந்தி ஆகியோரிடம் இருந்து தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துணைத்தலைவர் நவாஸ், மருத்துவரணி செயலாளர் தமீம் ஆகியோர் பாராட்டு சான்றிதழை பெற்றுக்கொண்டனர்.
சிறந்த ரத்ததான சேவைக்கான பாராட்டு சான்றிதழ் பெறுவதற்கு உறுதுணையாக இருந்த தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் அசாருதீன், செயலாளர் சுலைமான், பொருளாளர் ரஷீத், துணைச்செயலாளர்கள் இமாம்பரீத், இம்ரான் மற்றும் நிர்வாகிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 15வருடங்களாக தொடர்ந்து ரத்ததான முகாம்களை பல்வேறு பகுதிகளிலும் நடத்தி அரசு மருத்துவமனைகளுக்கு அதிகளவில் ரத்தம் பெற்றுக்கொடுப்பதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.