மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நல உதவிகள் : ஆட்சியர் செந்தில்ராஜ் வழங்கினார்!

 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,   தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்  இன்று  நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ,  சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1000/- வழங்குவதற்கான முதியோர் உதவித்தொகைக்கான ஆணையையும்,  பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 2021-22ஆம் ஆண்டிற்கு மாவட்ட அளவில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவியர் விடுதிகளில் சிறந்த முறையில் பணியாற்றிய 3 காப்பாளர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் கேடயங்களையும் வழங்கினார்.

இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 352 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு ஆட்சியர்  அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ்,  மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், சார் ஆட்சியர் கௌரவ் குமார்,  சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post