புதிய மேற்கு வங்க கவர்னர் : முன்னாள் அதிகாரி டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் மேற்கு வங்க ஆளுநராக நியமனம்.!

 

முன்னாள் அதிகாரி டாக்டர் சி.வி.ஆனந்த போஸ் மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார்

மேற்கு வங்காளத்தின் புதிய கவர்னராக சி.வி.ஆனந்த் போஸ் நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவித்துள்ளார்.

மணிப்பூர் கவர்னர் இல. கணேசன், மேற்கு வங்க கவர்னராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த நிலையில், தற்போது புதிய கவர்னர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதி மாளிகை செய்தித் தொடர்பாளர் அஜய்குமார் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு வங்கத்தின் கவர்னராக டாக்டர் சி.வி.ஆனந்த் போஸ் நியமிக்கப்படுகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த இவர் தற்போது மேகாலயா மாநில அரசின் ஆலோசகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



Ahamed

Senior Journalist

Previous Post Next Post