ஓபிஎஸ் அணி - தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் நியமனம். ஓபிஎஸ் அறிவிப்பு.!

 

தூத்துக்குடி மறைந்த அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற 2011 சட்டமன்ற பொதுத்தேர்தலில் தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளராக சி.த.செல்லப்பாண்டியன் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றார். அப்போது ஜெயலலிதா அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பணியாற்றினார். ஜெயலலிதா மறைவுக்கு பின்பும் அதிமுக மாவட்ட செயலாளராக தொடர்ந்து பணியாற்றினார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக அமைப்பபு செயலாளராக நியமனம் செய்தார். இபிஎஸ் ஓபிஎஸ் என இரு அணிகள் பிரிந்து தனித்தனியாக தற்போது செயல்படுகின்றனர்.

இரண்டு தரப்பினரும் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்திலும் சில உரிமைகளை சொந்தம் கொண்டாடி தேர்தல் ஆணையத்திலும் இரு தரப்பினரும் கொடுக்கப்பட்ட மனுக்களும் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக ஓருங்கிணைபபாளரும் பொருளாளருமான தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர் ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதி அடங்கிய மாவட்ட செயலாளராக நியமணம் செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து தூத்துக்குடி மாநகரில் பல இடங்களில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி அவரது ஆதரவாளர்கள் இல்லத்தில் சந்தித்து தங்களது தலைமையை ஏற்று பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post