தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் மாபெரும் சட்ட விழிப்புணர்வு முகாம்.!

 

தேசிய சட்டப்பணிகள்  ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில  சட்டப்பணிகள்  ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் இன்று 06.11.2022 தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, கிராம உதய தொண்டு நிறுவனம் மற்றும் அரசு துறைகளுடன் இணைந்து நடத்தும் புதிய வடிவிலான சட்ட விழிப்புணர்வு முகாமானது தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் உள்ள R.C. திருமண மஹாலில் வைத்து நடைபெற்றது.  

நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். மேற்படி விழிப்புணர்வு முகாமில் தூத்துக்குடி மாவட்ட சார்பு ஆட்சியர் கவ்ரவ்குமார், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்/சார்பு நீதிபதி M.ப்ரித்தா,  குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதிகள் V. சேரலாதன், செவ்வி B.A.ஜலதி, தூத்துக்குடி மாவட்ட தாசில்தார் செல்வகுமார்,  கிராம உதய தொண்டு நிறுவன இயக்குனர் /நிறுவனர் டாக்டர். V.சுந்தரேசன், தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் P.சிவ சங்கரன் ஆகியோர் முன்னிலை  வகித்து சிறப்புரை ஆற்றினார்கள். 

மேற்படி முகாமில்  தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள்,  தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் நல அலுவலர்கள்,   தூத்துக்குடி மாவட்ட சமுக நலத்துறை பணியாளர், கிராம உதய தொண்டு நிறுவன பணியாளர்களும், 800 க்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

மேற்படி முகாமில் தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் நலவாரியம் மூலம்  மக்களுக்கு தொழிலாளர் நலவாரிய அட்டையும், தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் மூலம்  மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக கைபேசியும்,  மரக்கன்றுகளும்  தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் வழங்கப்பட்டது. மொத்தம் 716 பயனாளிகள் இந்த  மாபெரும் சட்ட விழிப்புணர்வு முகாம் மூலம் பயனடைந்துள்ளார்கள்.  

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது தலைமையுரையில் செல்போனால் உருவாகக்கூடிய ஆபத்தினையும், அதில் இருந்து மக்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், புதிதாக போடப்பட்டுள்ள வாகன பாதுகாப்பு சட்டத்தை பற்றியும், இலவச சட்டத்திட்டத்தை பற்றியும்,  அரசு நலத்திட்டத்தை இலவச சட்ட உதவி மையம் மூலமாக எவ்வாறு பெறலாம் என்றும், குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், சட்டம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு இலவச சட்ட உதவி மையத்தையும் காவல்துறையையும் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு  கூறினார். 

முன்னதாக கிராம உதய தொண்டு நிறுவன மேலாளர் A.வேல்முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார். மேற்படி மாபெரும் சட்ட விழிப்புணர்வு முகாமை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்/ சார்பு நீதிபதி M.ப்ரித்தா ,  முதுநிலை நிர்வாக அலுவலக  உதவியாளர் S.தாமரை செல்வம், இளநிலை அலுவலக உதவியாளர் செல்வி.A.முத்து லெட்சுமி , பணியாளர்கள் A.நம்பிராஜன்,  T.பால் செல்வம் மற்றும் கிராம உதய தொண்டு நிறுவன ஊழியர் செல்வம், ராமச்சந்திரன் ஆகியோர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post