தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கலைஞர் அரங்கில் மாவட்ட அமைப்பாளர் சி.எம்.மதியழகன் தலைமையில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கன்டேயன், தூத்துக்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்...
மாநில இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேனி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுமக்கள் பயன்னடையும் வகையில் வடக்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட பகுதி முழுவதும் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொள்கைவிளக்க பாடல்களை ஒலிபரப்ப வேண்டும். மாநகர பகுதிகளில் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் முதியோர் ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளவர்களுக்கு காலை மதியம் உணவு வழங்கப்படுகிறது. கருப்பு சிவப்பு கொடியேந்தி இளைஞர் அணியினர் தைரியமாக மக்கள் பணியாற்ற வேண்டும். ஓரு கோடி உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சி நம்ம ஆட்சி கவலைப்படாமல் செயல்படுங்கள்.
ஓவ்வொரு பகுதிகளிலும் எதிர்கட்சியினர் நடத்தும் கூட்டங்களை கண்காணித்து அதை தகவலாக தெரிவித்து அதற்கு தாகுந்தாற்போல் நாமும் உடனடியாக தக்க பதிலடி கொடுக்க வேண்டும். அது போன்ற பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். ஹிந்தி தினிப்பை கட்டாயமாக்குவதைத்தான் நாம் எதிர்க்கிறோம். விருப்பப்பட்டு படிப்பதை எதிர்க்கவில்லை. தமிழ் மொழி அழிப்பு என்பது ஓரு இனத்தையே அழிப்பதற்கு சமம், தமிழர்களின் கலாச்சாரம் பாரம்பரியம் இதை பாதுகாக்க வேண்டியது நமது கடமை ஜாதி மதத்தால் பிரிவினையை ஏற்படுத்த நினைக்கும் எதிர்கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்.
அவரவர் மத வழிபாடுகளை அவரவர் மேற்கொள்ளட்டும் இல்லம்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை செல்கின்ற போது தாமாகவே முன்வந்து அதில் உறுப்பினராக பலர் இனைவதை நானே நேரில் கண்டுள்ளேன். இதையெல்லாம் பயன்படுத்தி எல்லா பகுதிகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் உதயநிதி ஸ்டாலின் என்னிடம் கேள்வி எதுவம் கேட்டால் அதற்கு பதில் நான் தான் சொல்ல வேண்டும். தொடர்ச்சியாக உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகளுடன் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மார்க்கன்டேயன் எம்.எல்.ஏ பேசுகையில்...
விளாத்திகுளம் தொகுதி முழுவதும் பல பிரிவுகளாக பிரித்து கபடி போட்டி நடத்தப்படும். ஒவ்வொரு கிளைச்செயலாளரிடம் 25 மரக்கன்றுகன் கொடுக்கப்பட்டு எல்லோருடைய வீட்டிலும் மரம் வளர்க்க வழிவகை செய்யப்படும் வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது விளாத்திகுளம் தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்கு சாவடிகளிலும் மாற்று கட்சியை விட நமது வாக்குதான் அதிகமாக இருக்கும் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். அடுத்து அமையவுள்ள ஆட்சியில் பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் முதல்வர் ஸ்டாலினிடம் வரும் இது எப்படி சாத்தியமாகும் என்று பலர் கேட்கின்றனர். கடந்த காலங்களில் பிரதமராக பொறுப்பிலிருந்தவர்கள் யார் என்று பார்த்தால் தெரியும் அதனால் நமக்கும் அது போன்ற வாய்ப்புகள் கிடைக்கும் அதை பயன்படுத்தி கொள்ளலாம்.
முதல்வரின் கரத்தை வலுப்படுத்த வடக்கு மாவட்ட திமுகவிற்கு விளாத்திகுளம் தொகுதி முழுமையாக ஓத்துழைப்பு வழங்கும் என்று பேசினார்.
பின்னர் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தில்.. இரண்டாவது முறையாக கழகத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை கூட்டம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.
வரும் 27ம் தேதி பிறந்தநாள் கானும் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பிறந்தநாளில் எழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் மருத்துவமுகாம் உணவு இனிப்புகள் வழங்கி அன்றைய தினம் தூத்துக்குடி விளாத்திகுளம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது.
கழகத் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாவட்ட மாநகர நகர பகுதி மற்றும் பேரூர் கழக நிர்வாகிளுக்கும் தலைமை செயற்குழு பொதுக்குழு நிர்வாகிகளுக்கு சிறப்பாக பணியாற்றிட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகமாக விரைந்து சேர்;க்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், பொருளாளர் ரவீந்திரன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, மாநகர துணைச்செயலளார் பிரமிளா, ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்னமாரித்து, செல்வராஜ், அன்புராஜ், ராமசுப்பு, மூம்முர்த்தி, நவநீத கண்ணன், சுப்பிரமணியன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், ராஜா, தலைமை கழக பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், கருப்பசாமி, டேவிட்ராஜ், மகேந்திரன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் முத்துராமன், செல்வின், சங்கரநாராயணன், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் ரவி, சூர்யா, துணை அமைப்பாளர் அல்பட், மற்றும் கருணா, மணி, செந்தில்குமார், பிரபாகர், லிங்கராஜா, உலகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்தகபரியேல்ராஜ் நன்றியுரையாற்றினார்.