தூத்துக்குடி ஜி.ஆர்.டி. ஹோட்டலில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ், தலைமையில், கூடுதல் ஆணையர் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை கிரேஸ் லால்ரிண்டிக்கி பச்சாவ் முன்னிலையில் ஒருமுனை தீர்வு மையம் இணையதள பயன்பாடு தொடர்பான பயிற்சி பட்டறை இன்று (11.11.22) நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் தெரிவித்ததாவது:
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்பதுபோல் வந்தாரை நன்றாக உபசரிக்கும் ஊர் தூத்துக்குடி. தொழில் முனைவோராகும் திறமை நமது ரத்தத்திலேயே உள்ளது. ஏனென்றால் சங்க காலத்தில் இருந்தே நாம் தொழில்முனைவோராக இருந்து வருகிறோம். தற்போது சிறு, குறு தொழில் முனைவோருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி பகுதியில் ஏராளமான சிறு, குறு தொழில்முனைவோர்கள் உள்ளனர். இதனை அதிகப்படுத்த வேண்டும். ஏனென்றால் ஏராளமானோர் வேலை கேட்டு வந்து கொண்டிருக்கின்றனர். சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்க அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை தொழில்முனைவோர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்க பணிகள் அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் முடிவடையும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் நாகப்பட்டினம் கன்னியாகுமரி வரையிலான பசுமை கிழக்கு கடற்கரை சாலை தூத்துக்குடி மாவட்டத்தில் சூரங்குடி கிராமம் முதல் ரிெயதாழை கிராமம் வரை அதிக தூரத்திற்கு செல்கிறது. இதனால் சாலை வழியாகவும் மூலப்பொருட்களை கொண்டு வருவதற்கு வசதியாக உள்ளது. அதேபோல் மணியாச்சி ரயில் நிலையம் - சங்கரப்பேரி சாலை பணிகளும் விரைவில் நிறைவடையும். கோவில்பட்டியில் தொழிற்பூங்கா, குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ளது. சிறு, குறு தொழில்களை ஒற்றைசாளர முறையினை பயன்படுத்தி மேம்படுத்த வேண்டும். தொழில்முனைவோர்களுக்கு தேவையான நிலம், மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்முனைவோர்கள் சிறு, குறு தொழில்களை தொடங்கி வேலைவாய்ப்புகளை பெருக்கி பொருளாதாரத்தை முன்னேற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ் குமார், யக்ஷக்ஷிதவர் மற்றும் சிறு, குறு தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டனர்.