சிறையில் இருக்கும் இஸ்லாமிய சகோதரர்களையும் விடுவிக்கலாமே; ராஜீவ் கொலையாளிகளுக்கு ஒரு நியதி, இஸ்லாமியர்களுக்கு ஒரு நியதியா.?- காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

 

வழக்குப் பதிவு செய்யப்படாமல் விசாரணைக்காக சென்ற பலர் சிறையில் இருக்கிறார்கள்; அவர்களை ஏன் விடுவிக்கவில்லை - கே.எஸ்.அழகிரி கேள்வி 

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி சென்னை கத்திபாராவில் உள்ள அவரது சிலைக்கு கேஎஸ் அழகிரி மாலை அணிவித்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் கோவை சிறையில் ஏராளமான இஸ்லாமிய சகோதரர்கள் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களில் பலர் வழக்கு விசாரணைக்கு என அழைத்து செல்லப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படாமலேயே சிறையில் உள்ளனர். அவர்களை விடுவிக்காதது ஏன், ராஜீவ் கொலையாளிகளுக்கு ஒரு நியதி, இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஒரு நியதியா. கூட்டணியில் இருப்பதால் எல்லாவற்றையும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணி வேறு கொள்கை வேறு என்றார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post