தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக பிரம்மசக்தி போட்டியின்றி தேர்வு - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்த்து.!

 

அதிமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு பெரும்பாண்மையான உறுப்பினர்கள் அதிமுகவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட ஊராட்சி மன்ற தலைவராக சத்யா, துணைத்தலைவராக செல்வக்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்தனர். 

திமுக ஆட்சி அமைந்ததும், துணைத்தலைவர் செல்வக்குமார் திமுகவில் இணைந்தார் பின்னர் பல மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் திமுகவில் இணைந்ததையடுத்து அதிமுக பலம் குறைந்தது. பின்னர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டன. நீதிமன்றத்திலும் இருந்த வழக்கு தீர்வு கிடைக்கப்பெற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கத்தில் நடைபெற்ற தலைவர் தேர்தலில் போட்டியிட பிரம்மசக்தி மனு அளித்திருந்தார். 

கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் வேறுயாரும் போட்டியிடாததால் பிரம்மசக்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். 

பின்னர் மாவட்ட ஊராட்சிமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரம்மசக்தி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வாழ்;த்துக்களை பெற்றுக் கொண்டார். இதனையடுத்து சண்முகையா எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ டேவிட் செல்வின், மாவட்ட ஊராட்சி மன்ற துணை தலைவர் மகாலெட்சுமி சந்திரசேகர், மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், துணைச்செயலாளர்கள் ஆறுமுகபெருமாள், ஜெயக்குமார் ரூபன், பொருளாளர் ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தூர்மணி, மாடசாமி, ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், துணை அமைப்பாளர் அம்பா சங்கர், பாலமுருகன், அனஸ், சுதாகர், மாவட்ட கவன்சிலர்கள் செல்வகுமார், ஞானகுருசாமி, பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகப்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் சரவணக்குமார், ஜெயக்கொடி, சுப்பிரமணியன், இளையராஜா, சுரேஷ்காந்தி, ராமசாமி, இசக்கிபாண்டியன், பகுதி செயலாளர்கள் ஆஸ்கர், சிவக்குமார், ஒன்றிய குழு தலைவர்கள் வசுமதி அம்பா சங்கர், ரமேஷ், கோமதி, மாணவரணி அமைப்பாளர் அருண்குமார், தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பேரின்பராஜ் லாசரஸ் பொறியாளர் அணி அமைப்பாளர் ஆனந்த், ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் டிடிசி ராஜேந்திரன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரெங்கசாமி, தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, துணை அமைப்பாளர் ஆறுமுகம், வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரகுராமன், பூங்குமார், மாவட்ட பிரதிநிதிகள் வெயில்ராஜ், நாகராஜன், நெல்சன், சப்பாணிமுத்து, கோபால், ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபால கிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் சுதா சீனிவாசன், முன்னாள் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், சாயர்புரம் பேரூராட்சி கவுன்சிலர் ஜெபசங்கம் பிரேமா, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் பால்ராஜ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் ஸ்டாலின், பரியேறும் பெருமாள், அனிட்டன், ஜெகன், கொம்பையா, மாசிலாமணி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் தங்கராஜ், அலெக்ஸ்ராஜ், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சண்முகநாராயணன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் மற்றும் பரமசிவம், வக்கீல் கிருபாகரன், கபடி கந்தன், அகில இந்திய பார்வட் பிளாக் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் ஸ்ரீவை சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டு, மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்திக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post