தூத்துக்குடியில் ஹிந்தி தினிப்புக்கு எதிராக துண்டு பிரசுரம் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.!

 

தூத்துக்குடி தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான முக.ஸ்டாலின் ஒன்றிய அரசின் கட்டாய ஹிந்தி தினிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன பொதுகூட்டம் தெருமுனை பிரச்சாரம் போன்றவைகளை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டதையடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநகர பகுதியான 26, 27வது வார்டுக்குட்பட்ட எஸ்.எஸ்.பிள்ளை மார்க்கெட், மார்கெட் ரோடு, எஸ்.எஸ்.பிள்ளை தெரு, வடக்கு பத்திரகாளியம்மன் கோவில் தெரு, யாதவர் தெரு, செயின்ட்ஜான் தெரு, வடக்கு வானியன்விளை, தெற்கு வானியன்விளை, உள்பட பல பகுதிகளில் வீதிவீதியாக நடந்து சென்று வடக்கு மாவட்;ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொதுமக்களிடம் ஹிந்தி தினிப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், திரேஸ்புரம் பகுதி திமுக செயலாளரும் மாநகராட்சி மண்டலத் தலைவருமான நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் சரண்யா, மரியகீதா, மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் டைகர் வினோத், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் செல்வின், வட்டப்பிரதிநிதிகள் ஏகாம்பரம், ஜெயக்குமார், அவைத் தலைவர்கள் திருமணி, மாயாண்டி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post