பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை -தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு.!

 

மழையின் காரணமாக மாநகராட்சி பகுதியில்  பொதுமக்கள் பாதிக்காத வகையில் பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்பை போல் இந்த ஆண்டு மழைகாலங்களில் அது போன்ற நிலை வரக்கூடாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி மாநகராட்சி பகுதி முழுவதும் புதிய கால்வாய் சாலை வசதி என கட்டமைப்பு பணிகளை விரைவாக செய்துகொடுக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை மாநகர் முழுவதும் அதிகாரிகள் உள்பட அமைச்சர் மேயர் கண்காணித்து வருகின்றனர்.

50வது வார்டு என்ஜிஓ காலணி கிழக்கு தாழ்வான பகுதிகளில் மழைநீர் கடந்த காலங்களில் தேங்கியதையடுத்து இந்த ஆண்டு அது போல் நடைபெறாமல் பாதுகாத்து கொள்ளும் வகையில் 50வது வார்டு கவுன்சிலர் சரவணக்குமாரிடம் பகுதிசபா கூட்டத்தின் போது பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை யடுத்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதியில் சாலையை உயர்த்துவது மணல் சரல் போன்றவற்றை நிரப்பி மழைநீர் தேங்காதவாறு பாதுகாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு பணியை தொடங்கி வைத்தார்.

ஆய்வின் போது மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர் சரவணக்குமார், வட்டப்பிரதிநிதிகள் வேல்மணி, ராஜேந்திரன், செல்வம், ராஜேஷ், சங்கரநாராயணன், பகுதி சபா உறுப்பினர் சிவசங்கர், முன்னாள் கவுன்சிலர் செந்தில்குமார், மற்றும் அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post