புரூசல்-ஐ தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஐ.எப்.ஜே., என்ற சர்வதேச பத்திரிகையாளர் சங்கத்துடன் (என்.யு.ஜே.,) இணைந்து செயல்படும் பத்திரிகையாளர் சங்கமாக இருப்பது நேஷனல் யூனியன் ஆப் ஜர்ணலிஸ்ட்ஸ் (இந்தியா) என அழைக்க கூடிய தேசிய பத்திரிகையாளர் சங்கமாகும். இந்த சங்கத்தின் இரண்டு நாள் தேசிய மாநாடு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்று வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கைலாஷ் பிரசிடென்சி ஓட்டல் அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு தேசிய தலைவர் ராஸ் பிஹாரி, பொது செயலாளர் பிரசன்ன மொஹந்தி, தேசிய துணை தலைவரும், மத்திய பிரதேச மாநில சங்கத் துணை தலைவருமான பிரதீப் திவாரி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். முன்னாள் மேற்கு வங்க கவர்னர் கைலாஷ் , நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் அஜய் பிரதாப் சிங் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். பிரம்ம குமாரிகள் அமைப்பின் நிர்வாகி ரீனா தொகுத்து பேசினார்.
இந்த மாநாட்டில் பத்திரிகையாளர் மீதான வன்முறைகள் தடுக்கப்பட வேண்டும், மீடியா கவுன்சில் உருவாக்கம், என்.ஆர்.பி., எனக்கூடிய பத்திரிகையாளர்களுக்கன தேசிய பதிவேடு, பத்திரிகையாளர் ஆணையம், பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் ரயில்வே சலுகையை மீண்டும் உடனடியாக செயல்படுத்த வேண்டும். என்பது உள்ளிட்ட பத்திரிகையாளர் நலனுக்கான பல்வேறு விஷயங்கள் வலியுறுத்தப்பட்டன. பல்வேறு மாநில பத்திரிகையாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் மாநிலத்தில் பத்திரிகையாளர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் பற்றி பேசினார்கள். இந்த மாநாட்டில் பிரம்ம குமாரிகள் அமைப்பினர் சிறப்பு பங்கேற்பாளர்களாக இருந்து நிகழ்வுகளை முன்னெடுத்து நடத்தினார்கள். இதில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட இதழியலாளர்கள் பங்கேற்றார்கள். அனைத்து மாநில நிர்வாகிகளுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.