யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவின் எம்.எஸ்.எம்.இ., கிளை திறப்பு விழா வீரஸ் அரங்கில் நடைபெற்றது. திருப்பூர் மேயர் என் தினேஷ்குமார் விழாவிற்கு தலைமை தாங்கினார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க பொருளாளர் ஆர் கோபாலகிருஷ்ணன், எஸ்.என்.கியூ.எஸ்., இண்டர்நேஷனல் குழும நிர்வாக இயக்குநர் ஆர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
யூனியன் வங்கி மண்டல தலைவர் பிஎம் செந்தில் குமார், யு,எம்.எப்.பி.,யின் சிறப்பு அம்சங்களை விளக்கினார். இந்த கிளையானது அனைத்து எம்.எஸ்.எம்.இ., சேவைகளையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிகழ்ச்சியில் வங்கியின் வாடிக்கையாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.