உலக கழிப்பறை தினத்தையொட்டி மாப்பிள்ளையூரணி பஞ்., தலைவர் சரவணக்குமார் தலைமையில் உறுதிமொழி ஊர்வலம் நடைபெற்றது.
தூத்துக்குடி தூய்மை பாரத இயக்கம், ஊரகம், சுகாதார திட்டம் சார்பில் உலக கழிப்பறை தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாப்பிள்ளையூரணி ஊராட்சி அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் எனது கிராமம் திறந்தவெளியில் மலம் கழித்தலமற்ற கிராமாக நிகழ்த்திட அனைத்து முயற்சிகளையும் செய்வேன்.
நான் எப்போதும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம்பிரிப்பேன். மக்கும் குப்பைகளை என் வீட்டிலேயே உரமாக்கி வீட்டு தோட்டத்திற்கு பயன்படுத்துவேன். தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை மட்டுமே தூய்மை காவலர்களிடம் கொடுப்பேன். தீங்கு விளைவிக்க கூடிய குப்பைகளை பாதுகாப்பான முறையில் கையாளுவேன். உறிஞ்சிகுழி அமைத்து எனது வீட்டிலும் தெருக்களிலும் கழிவு நீர் தேங்காமல் பாதுகாப்பாக அகற்றி நோய் பரவாமல் தடுப்பேன். நீர்நிலைகள் திட மற்றும் திரவ கழிவுகளால் மாசுபடாமல் பாதுகாப்பேன்.
ஓரு முறை பயன்படுத்தக்கூடிய நெகிழி பொருட்களை பயன்படுத்த மாட்டேன். கடைகளுக்கு செல்லும் போது துணிப்பையை எடுத்துச்செல்வேன். வீட்டிலும் பொது இடங்களிலும் மரங்கள் வளர்த்து சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு பங்காற்றுவேன். குறைத்தல் மறுபயன்பாடு மற்றும் மறு சூழற்சி என்ற கொள்கையினை பின்பற்றுவேன். எனது குடும்பத்தினர் மற்றும் அனைவருக்கும் கழிப்பறை பயன்பாடு திடக்கழிவு மேலாண்மை திரவ கழிவு மேலாண்மை மற்றும் நெகழிப்பொருட்களை தவிர்த்தல் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முழுமையாக பங்களிப்பேன். எனவும் நமது கிராமத்தை எழில் மிகு கிராமமாக மாற்ற உறுதுணையாக இருப்பேன் என்று உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
பின்னர் ஊர்வலமாக சென்று மாப்பிள்ளையூரணி சாலை வழியாக மீண்டும் ஊராட்சி மன்ற அலுவலகம் வந்தடைந்தனர்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ்வரி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி காமராஜ், பாரதிராஜா, தங்கமாரிமுத்து, வசந்தகுமாரி, ராணி, முன்னாள் ஊராட்;சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி துணைச்செயலாளர் ஆரோக்கியமேரி, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சங்கரன், குழு உறுப்பினர் ஜெகதீஸ்வரன், மற்றும் கௌதம், உள்பட தூய்மை காவலர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ஜெயக்குமர் அனைவருக்கும் நன்றி கூறினார்.