"பாஜக அண்ணாமலை பொய் பிரச்சாரத்திற்கு தக்கபதிலடி கொடுக்க வேண்டும்"- அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்!

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டம் கலைஞர் அரங்கில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்.. 

"ஹிந்தி தினிப்பை ஒன்றிய அரசு செய்துவருவதை தடுக்கும் விதமாக ஒன்றியம் நகரம் பேரூர் பகுதி கிளைக்கழகம் வரை கூட்டங்கள் நடத்தி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். புதிய வாக்காளர் சேர்க்கை நமக்குரியது மட்டும் நிரப்பி விரைவில் தர வேண்டும் அதை தலைமை கழகம் மூலம் அனுப்பி வைக்கப்படும் ஹிந்தி திணிப்பை கட்டாயம் என்று கூறுவதை நாம் எதிர்க்கின்றோம் படிப்பவர்கள் படிக்கட்டும் அதற்கு ஆட்சேபனை இல்லை. தமிழர்கள் உலகம் முழுவதும் பணி செய்து வளர்ச்சியடைந்துள்ளனர். அதை தடுக்கும் விதமாக ஹிந்தி கட்டாயம் என்று சொல்லி வேலைவாய்ப்பை ஒன்றிய அரசு தடுக்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திற்கு தாய் மொழி என்றிருக்கிறது. அதே போல் இங்கு துணை மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. ஹிந்தி ஆங்கிலம் போன்ற எழுத்து தேர்வுகள் மூலம் தேர்ச்சி பெற்று அரசு பணிக்கு செல்லுக்கின்றவர்கள் ஹிந்தி மட்டும் தான் என்றால் தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள். அதை தான் நாம் எதிர்க்கின்றோம் ஓரே நாடு ஓரே மொழி என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பண்முகதன்மை கொண்ட இந்தியா கலாச்சாரம், மொழி, உணவு ஒவ்வொன்றும் மாறுபடுகிறது. அதை முற்றிலுமாக எதிர்க்கிறோம். முதல்வர் ஸ்டாலின் உத்தரவு படி ஹிந்தி திணிப்பை ஏன் திமுக எதிர்க்கிறது. என்ற விளக்க நோட்டீஸை வீடுகள் தோறும் கொண்டு சேர்க்க வேண்டும்.

வடக்கு மாவட்ட திமுக செயல்பாடுகள் முதல்வரின் கவனத்திற்கு செல்லும்படி இருக்க வேண்டும். மகளிர்கள் அதிக அளவில் உறுப்பினர்கள் சேர்க்கை வேண்டும் என்று துணைப்பொதுச்செயலாளரும் மகளிர் அணி செயலாளருமான கனிமொழி எம்.பி கூறியுள்ளார்கள். ஒன்றிய செயலாளர்கள்.

திறமையுள்ள மகளிர் அணியினரை பயன்படுத்திக்கொண்டு உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும். வரும் 27ம் தேதி மாநில இளைஞர் அணி செயலாளரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை இனிப்புகள் வழங்கி கலைஞரின் கொள்கை விளக்க பாடல்களை ஒலிப்பரப்பி நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். 

அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் அது அண்ணாமலை யல்ல யாராக இருந்தாரும் கைது செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான் இதில் அரசியல் செய்து குளிர்காய நினைக்கும் பாரதிய ஜனதாவுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். முதல்வரை குறைசொல்ல யாருக்கும் அருகதை கிடையாது. 2024 தேர்தலில் பிஜேபிக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் இவ்வாறு பேசினார்.

மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்... "முதலமைச்சரின் சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாத பிஜேபி பொய்பிரச்சாரங்களை பரப்பி கொண்டு என்ன செய்கின்றோம் என்று தெரியாமல் பேசி வருகின்றன. அதிலும் அண்ணாமலை அதிகமாக பேசி வருகிறார். பல இணைய தள வாட்சப்களில் நம் தலைவரையும் கழகத்தையும் குறை கூறி வருகின்றன. அதற்கு அனைவரும் உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும் ஒன்றரை ஆண்டுகால ஆட்சியில் யாரும் குறைசொல்ல முடியாத படி இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் ஆட்சி செய்து வருகிறார் முதல்வர். இனி வரும் காலங்களில் முதல்வரின் கரத்தை வலுப்படுத்த பதவியில் இருப்பவர்களும் இல்லாதவர்களும் இனைந்து அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று பேசினார்.

முன்னதாக மறைந்த திமுகவினருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஓரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஹிந்தி எதிர்ப்பு நோட்டீஸ் விநியோகத்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கி தொடங்கி வைத்தனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தமிழக முதலமைச்சர் கழக தலைவர் மு.க.ஸ்டாலினை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் உழைப்பு உழைப்பு உழைப்பு அதன் பெயர் தான் மு.க.ஸ்டாலின் என்று பாராட்டு பெற்று அதன்படி அனுதினமும் அயராது உழைத்து தமிழகத்தில் ஓரு நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளார். எல்லோருக்கும் எல்லாம் என்ற தாரக மந்திரத்துடன் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் நம்முடைய கழக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞரின் மறைவிற்கு பிறகு திமுக கழக தலைவராக இரண்டாவது முறையாக கழக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருடைய ஒப்புதலின் பெயரில் போட்டியின்றி ஏகமனதுடன் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் கழக தலைவர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. திமுக துணைப்பொதுச்செயலாளராக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும் மாநில மகளிர் அணி செயலாளருமான கனிமொழி கருணாநிதி அவர்களை தேர்வு செய்த தலைவர் முதல்வர் முக.ஸ்டாலினுக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. மீண்டும் ஓரு மொழி போராட்டத்தை தூண்டி விடும்விதத்தில் ஒன்றிய பாஜக அரசு ஒரே நாடு ஓரே மொழி என்ற கோட்பாட்டை உருவாக்கி தமிழகத்தில் ஹிந்தியை திணிக்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறது. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற விதத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஹிந்தி தினிப்புக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். தமிழகம் முழுவதும் ஹிந்தி தினிப்புக்கு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் மற்றும் அதுகுறித்த துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு வீடுகள் தோறும் வழங்க வழங்க தலைமை கழகம் நமக்கு அறிவுறுத்தியுள்ளது. இப்பணியை சிறப்பாக செய்வது உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட துணைச்செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, பொருளாளர் ரவீந்திரன், மாநகராட்;சி மண்டலத் தலைவர்கள் நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி நிர்வாகிகள் கஸ்தூரிதங்கம், உமாதேவி, மதியழகன்,  ஜெபசிங், அபிராமிநாதன், அந்தோணிகண்ணன், பிரதீப், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, வசந்தம் ஜெயக்குமார், 

தலைமை செயற்குழு உறுப்பினர் என்.ஆர்,கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், சேர்மபாண்டியன், ராஜ்குமார், இசக்கிராஜா, சுந்தரவேல், ஒன்றிய செயலாளர்கள் காசிவிஸ்வநாதன், முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்னமாரித்து, செல்வராஜ், அன்புராஜ், ராமசுப்பு, மூம்முர்த்தி, நவநீதிகண்ணன், சின்னபாண்டியன், சுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், மாநகர அணி நிர்வாகிகள் அருண்குமார், ஜெயக்கனி, டேனி, அருண்சுந்தர், சங்கரநாராயணன், முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், செல்வகுமார், மற்றும் கருணா, ரவி, பிரபாகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post