கழுகுமலை அரசுப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு, போதை பொருள் தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி.!

 

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அரசு மேல்நிலை பள்ளியில் வைத்து குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு, போதை பொருள் தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி மக்கள் சேவை இளைஞர் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ சாய்லிங்கா அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் சீதா மகேஸ்வரி தலைமையேற்றார். மாணவன் அஸ்வின் வரவேற்புரை ஆற்றினார்  அறக்கட்டளை தலைவர் உமையலிங்கம் சிறப்புரை ஆற்றினார் குழந்தைகள் நல ஆலோசகர் சுரேத்துவாணி  வாழ்த்துரை வழங்கினார். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் ராஜ கோபால் சிறப்புரை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் குழந்தை பாதுகாப்பு, நலன் தொடர்பான போட்டிகள் நடத்தப்பெற்றதில் 100 மாணவ மாணவியர் பங்கேற்றனர். அறக்கட்டளையின் சார்பில் போட்டியில் வெற்றி பெற்ற 18 குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது  மேலும் இந்நிகழ்வில் சுமார் 900 பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். பள்ளியின் தமிழ் ஆசிரியர் சங்கரதேவி நன்றி கூறினார் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post