இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
"மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. மருத்துவர்களை கடவுளாக பார்க்கும் மக்கள் மத்தியில் அவர்கள் செய்யும் சிறிய கவனக்குறைவும் உயிரிழப்பு போன்ற மிகப்பெரிய தவறு நடந்துவிட வாய்ப்பாகிறது. மருத்துவத்துறையில் பல அரிய சாதனை படைத்த தமிழ்நாடு மருத்துவர்கள் மீது மக்களுக்கு எள்ளளவும் அச்சம் வந்துவிடக்கூடாது. அந்த வகையில் மருத்துவர்கள் செயல்படவேண்டும்.
தவறு செய்த மருத்துவர்கள் மீது உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுத்த மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் அவர்கள் எடுத்துள்ளார். மேலும், ப்ரியா குடும்பத்தினருக்கு இழப்பீடும், குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலையும் அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
ஒரு சில மருத்துவர்கள் செய்த தவறால் தமிழக அரசை எதிர்க்கட்சிகள் குறை சொல்கின்றார்கள். தமிழக அரசின் நடவடிக்கையில் குறை காணமுடியாதவர்கள் சோகமான, துக்ககரமான சம்பவத்திலும் அரசியல் செய்ய வேண்டுமென்று நினைக்கின்றார்கள். இவர்களின் இந்த இழிவான செயல் மிகவும் கண்டிக்கத்தது. இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு இனி வரும் காலங்களில் இதுபோன்ற விரும்பதகாத சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும்" என தெரிவித்துள்ளார்.