தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மீனவரணி சார்பில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ஏழை எளிய மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், வட்டச்செயலாளர் டென்சிங், மாவட்ட மீனவரணி துணைச் செயலாளர் ராபர்ட், கவுன்சிலர்கள் ரெக்ஸிலின், பவாணி மார்ஷல், மெட்டில்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனியல் வரவேற்புரையாற்றினார்.
மீனவர் தினத்தையொட்டி நடைபெற்ற படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி 800 பேருக்கு 4லட்சம் மதிப்பீல் தையல் மிஷின் சேலை மீனவர்களுக்கான அலுமினிய அண்டா ஆகியவற்றை வழங்கி கனிமொழி எம்.பி பேசுகையில் மறுக்கப்பட்ட கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். உலக நாடுகளோடு போட்டி போடும் வகையில் உருவாக வேண்டும். அந்த கல்வியை கெடுக்காமல் பாத்துக்கொள்ள வேண்டியது நமது கடமை மொழியின் மூலம் மருத்தவர்களாக வேண்டிய மாணவ மாணவர்களின் எதிர்காலம் நீட் தேர்வின் மூலம் தடைபடுகிறது. எல்லோருக்கும் உயர் படிப்புகள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கலைஞர் ஆட்சியில் மாவட்டத் தோறும் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்;டது.
விவசாயிகளுக்கு எதிராக ஓன்றிய அரசு சட்டம் கொண்டு வந்தபோது ஓருவருட காலமாக போராட்;டம் நடத்தினார்கள். தேர்தல் வந்த காரணத்தால் அந்த சட்டம் பின் வாங்கப்பட்டது. அதே போல் மீனவர்களுக்கு எதிராக எந்த சட்டத்தையும் திட்டத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் திமுகவும் மீனவர்களின் உரிமையை விட்டுக் கொடுக்காமல் பாதுகாக்கும். தொடர்ந்து மக்களுக் கெதிரான சட்டங்களை பிஜேபி அரசு செயல்படுத்த நினைக்கிறது. மக்கள் உரிமையை பறிக்கும் செயலில் மட்டுமின்றி அதையும் கடந்து ஜாதி மதம் உருவாக்கி தமிழர்களுக்கு எதிரான முயற்சியிலும் தமிழ்நாட்டிற்கும் எதிரான செயல்களில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும்.
படிப்பு வேலைவாய்ப்பு இல்லாத நிலை இருக்கிறது. அரசு வேலைவாய்ப்பு இல்லை. 500, 1000 செல்லாது என அறிவித்து கருப்பு பணம் ஒழிப்போம் என்றார்கள் அதுவும் இல்லை. தவறான கொள்கையை கடைபிடிக்கும் பிஜேபியை அனைவரும் புறக்கனிக்க வேண்டும். மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு தந்து விடக்கூடாது. வரும் தேர்தலில் கூட ஏதாவது ஓரு சிறு விஷயத்தை கையில் எடுத்து ஜாதி மதத்தை கூறி பிரிக்க நினைப்பார்கள். அதற்கு இடம் அளித்து விடக்கூடாது.
தமிழ்நாட்டின் அடையாளத்தை அனைவரும் பாதுகாக்க வேண்டும்;. 1989ல் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளை உருவாக்கி கொடுத்தது திமுக கடல்சார் பயிற்சி பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் ஆழப்படுத்தப்பட்டுள்ளது. திரேஸ்புரம் படகு நிறுத்தும் இடம் விரிவாக்கம், திரேஸ்புரம் கடற்கரை திரேஸ்புரம் சாலை இனிகோநகர் கடற்கரை, ஆகிய பகுதிகளில் ஹைமாக்ஸ் லைட் அமைத்து மற்றும் உங்களது அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருகிறேன். அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் ரூ1000 வழங்கப்பட்டுள்ளது. எம்.பி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளது. உங்களோடு நின்று பணியாற்றும் இயக்கம் திமுக. ஓன்றிய அரசோடு சேர்ந்து அதிமுக மக்கள் விரோத பறிப்பு செயலில் ஈடுபட வருவார்கள் இடமளிக்க வேண்டாம். தமிழகத்தை பாதுகாக்கவும் அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கவும் முதல்வரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் துணை நிற்க வேண்டும். என்று பேசினார்.
அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் ஒன்றிய அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின் தமிழர்களையும் தமிழ் மொழியையும் அழிக்கும் வகையில் செயல்படுகிறது. ஓரேநாடு ஓரே மொழி என்பது சாத்தியப்படாது நாம் தமிழ் பேசுகிறோம் உணவு கலச்சாரம் மாறுப்படுகிறது. மற்ற மொழிகளை பயன்படுத்தி தமிழ் மொழியை அழித்து வேலைவாய்ப்பை பறிக்கிறது. தமிழர்கள் நல்ல முறையில் படித்து உழைப்பின் மூலம் உலகம் முழுவதும் அவர்களது திறமையின் மூலம் வாழ்கின்றனர் சமஸ்கிருத மொழிக்கு 640 கோடி ஓதுக்கீடு, தமிழ் மொழிக்கு 70 கோடி ஓதுக்கீடு, இதிலும் வேறுபாடு ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை எல்லாம் விற்பனை செய்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்தையும் சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுக்கிறது. ஏழைகளை தொடர்ந்து பாதிக்கும் செயல்களில் ஒன்றாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகை முறையாக வழங்கபடவில்லை. கேஸ் மாணியம் தரப்படும் என்று கூறி அதுவும் வழங்கபடவில்லை கேஸ் விலை 1200 ஆக உயர்ந்துள்ளது. ஒன்றிய அரசு அதிகாரத்தில் இருக்கிறோம் என்று ஆட்டம் போடுகிறது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். என பணியாற்றி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அடுத்து வரும் தேர்தலிலும் தலைவர் கனிமொழி எம்.பி பதவிக்கு போட்டியிடுவதற்கு வாய்ப்பளிப்பார் என்று பேசினார்.
விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநில பேச்சாளர்கள் சரத்பாலா, இருதயராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகராட்சி மண்டலததலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, கலைச்செல்வி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொருளாளர் அனந்தையா, பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், மேகநாதன், மீனவரணி நிர்வாகிகள் பெப்பின், ஜேசையா, மாதவடியான், அந்தோணிராஜ், சந்திரமோகன், ஸ்மைலன், ஜெனிபர், அண்டன் பொன்சேகா, இலக்கிய துணை அமைப்பாளர் நலம் ராஜேந்திரன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த கபரியேல்ராஜ், மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அருண்குமார், மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாணவரணி துணை அமைப்பாளர் பால்மாரி, தொழிற்சங்க தலைவர் மரியதாஸ், மாவட்ட பிரதிநிதி நாராயணன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், கந்தசாமி, விஜயகுமார், வட்டச்செயலாளர்கள் லியோ ஜான்சன், அண்டோ, சுப்பையா, வன்னியராஜ், கருப்பசாமி, கதிரேசன், முக்கையா, அனல்சக்திவேல், பரதர் நலதலைமை சங்க தலைவர் ரெனால்ட் வில்லவராயர், செயலாளர் அந்தோணிசாமி, பொருளாளர் ஜாய்காஸ்ட்ரோ, அவை முன்னவர் சேவியர் வாஸ், மற்றும் சுரேஷ்குமார், பெல்லா, வெலிங்டன், கமலி, உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி நன்றியுரையாற்றினார்.