வாக்குச்சாவடி முகவர் பட்டியல் - தாசில்தாரிடம் ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா வழங்கினார்.

 

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்கு சாவடி திமுக முகவர்களுக்கான பட்டியலை மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த பரிந்துரை கடிதத்தை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலரும் தாசில்தாருமான நிஷாந்தினியிடம் சண்முகையா எம்.எல்.ஏ, வழங்கினார்.

ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு சரவணக்குமார், ஓட்டப்பிடாரம் இளையராஜா, தூத்துக்குடி வடக்கு சுப்பிரமணியன், மத்திய ஒன்றியம் ஜெயக்கொடி, கருங்குளம் வடக்கு ராமசாமி, கிழக்கு சுரேஷ் காந்தி பகுதி செயலாளர்கள் சிவகுமார், ஆஸ்கர் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் தெற்கு மாவட்ட சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து மற்றும் கௌதம் ஆகியோர் உடனிருந்தனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post