சென்னை மெரினா சாலையில் கடற்படை பேருந்து மோதி, இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி லலிதா உயிரிழந்தார். இதனையடுத்து வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்ற, அப்பெண்ணின் சடலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிலையில்வயிற்றில் இருந்த 8 மாத குழந்தையும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்ததையடுத்து கடற்படைக்கு சொந்தமான பேருந்தை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் சிவா ரெட்டியும், கடற்படையில் பணியாற்றிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.