தூத்துக்குடி மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேனி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதிஸ்டாலின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் எட்டையாபுரம் ரோடு கலைஞர் அரங்கில் நடைபெற்ற விழாவில் தையல் மிஷின் 15 சைக்கிள் 1 உதவித்தொகை 12 பேருக்கு ஹாட் பாக்ஸ் 700 பேருக்கு என மொத்தம் 728 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் ஒவ்வொரு ஆண்டும்; நவம்பர் 27ம் தேதி கழகத்தலைவரின் புதல்வன் பிறந்தநாளை யொட்டி தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா கொண்டாடப்படுகிறது. அதே போல் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் கேக் வெட்டுதல் முதியோர் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உணவுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி தொகுதி மக்களுக்கு உதவிடும் வகையில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
தமிழக முதலமைச்சராக முக.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கடுமையான நிதிநெருக்கடி மறுபுறம் ஒன்றிய அரசின் நெருக்கடி இவற்றை யெல்லாம் தாங்கி கொண்டு பொருளாதார நிலை உயர்வதற்கும் தொழில் வளம் பெருகுவதற்கும் கல்வி வளர்ச்சியடைவதற்கும் என அனைத்து துறைகளையும் முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் சென்று தமிழர்களின் வாழ்வாதாரமும் கலாச்சாரமும் பாதுகாக்கப்பட்டு உலகம் முழுவதும் தமிழர்களின் பெருமையை எடுத்துச் சொல்லும் வகையில் பணியாற்றும் முதலமைச்சர் தமிழகத்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார். முதல்வரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று பேசினார்.
விழாவில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலளார் புளோரன்ஸ், மாநகராட்;சி மண்டலத் தலைவர்கள் நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் உமாதேவி, தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, செயற்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பார்வதி, அருணாதேவி, மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பிரபு, வர்த்தக அணி துணை அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாணவரணி துணை அமைப்பாளர்கள் பால்மாரி, டைகர் வினோத், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சிவக்குமார் என்ற செல்வின், அருண்சுந்தர், முத்துராமன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயலட்சுமி, விஜயகுமார், ஜான்சிராணி, வைதேகி, கந்தசாமி, ஜாக்குலின் ஜெயா, ஜெயசீலி, தெய்வேந்திரன், இசக்கிராஜா, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சேர்மபாண்டியன், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சுப்பையா, பாலு, சுரேஷ், மூக்கையா, வன்னிராஜ், செல்வராஜ், டென்சிங், பொன்னுச்சாமி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, வட்டப்பிரதிநிதிகள் ரஜினிமுருகன், பாஸ்கர், முன்னாள் கவுன்சிலர்கள் செல்வக்குமார், செந்தில்குமார், மற்றும் கருணா, மணி, அல்பட், மகளிர் அணி ரேவதி, சத்யா, பத்மாதேவி, சந்தனமாரி, பெல்லா, இந்திரா, மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் துரை, நிர்வாகிகள் பிரபு, ராஜகுரு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.