தமிழகம் முழுவதும் 239 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பியாக பதவி உயர்வு.! ஏடிஜிபி அமல்ராஜ் உத்தரவு - தூத்துக்குடி மாவட்டத்தில் 7 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பியாக பதவி உயர்வு.!

 

தமிழகம் முழுவதும் 239 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பியாக பதவி உயர்வு அளித்து  ஏடிஜிபி அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வரும்  7 இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ஜெயப்பிரகாஷ், தூத்துக்குடி வடபாகம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தனபால், தென்பாகம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மூக்கன், முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், பசுவந்தனை இன்ஸ்பெக்டர் சுதேசன், மணியாச்சி இன்ஸ்பெக்டர் கோவிந்தன், கயத்தார் இன்ஸ்பெக்டர் முத்து ஆகிய 7பேர் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 

இவர்கள் அனைவரும் 1996 மற்றும் 1997-ம் ஆண்டுகளில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post