தூத்துக்குடி - தமிழக அரசு மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற அடிப்படையில் வார்டுக்குட்பட்ட பகுதிகளில் பகுதி சபா கூட்டம் நடத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டு பகுதிகளில் அதிகாரிகள் நியமணம் செய்யப்பட்டு பூங்கா, மற்றும் பொதுஇடங்கள் என 300 இடங்களில் மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்ட பகுதி சபா கூட்டம் நடைபெற்றது.
மாநகராட்சி 20வது வார்டு மேயரின் பகுதிக்குட்பட்ட போல்பேட்டை கீதா ஹோட்டல் அருகேயுள்ள இடத்தில் நடைபெற்ற பகுதி சபா கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ முன்னிலை வகித்தார். மேயர் ஜெகன் பெரியசாமி வரவேற்புரையாற்றினார்.
பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் "முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி கிராமசபை கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் நகராட்சி மாநகராட்சி பகுதியில் மக்களின் கருத்தை கேட்டு அதன்படி திட்டம் தயாரிக்கப்பட்டு செயல்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. நீங்கள் கூறும் கருத்துக்களின் அடிப்படையில் கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை எந்த பணிகளை முதலில் செய்வது மற்ற பணிகளை அடுத்தக்கட்டமாக செய்வது என்று முறைப்படுத்தி செய்வதற்குத்தான் இந்த கூட்டம் பல்வேறு பகுதிகளில் உள்ள குறைகளை நீங்கள் தெரிவிப்பதை அனைத்தையும் குறிப்பெடுத்துக்கொண்டு முழுமையாக அப்பணியை செய்து கொடுப்போம். பலருக்கு இடம் இருந்தும் குடியிருப்பு வசதியில்லாமல் இருந்தால் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டுவதற்கு வழி வகை செய்யப்படும் இடம் இல்லாதவர்கள் அடுக்கு மாடி குடியிருப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். மாநகர பகுதியில் சுயஉதவி குழுக்களுக்கு மானியம் குறைபாடுகள், மகளிர் திட்டம் மற்றும் அரசின் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக உங்களுக்கு கிடைக்க இந்த பகுதி சபா கூட்டம் மூலம் வழிவகை செய்யப்படும் என்றார்.
மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படியும் கனிமொழி எம்.பி அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனை படி மாநகராட்சி பகுதி முழுவதும் இது போன்ற பகுதி சபா கூட்டம் நடைபெறுகிறது.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இதன் முதல் கூட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் அந்த பகுதியில் உள்ள குறைகளை எங்கள் கவனத்திற்கு கொண்டுவருவார்கள். அதை அதிகாரிகளோடு இணைந்து குறைகளை தீர்த்து வைப்போம்.
மாநகரை பொறுத்தவரை பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான சாலை கால்வாய் தெருவிளக்கு சுகாதாரம் குடிதண்ணீர் போன்ற முக்கிய பணிகளும் பெயர் மாற்றம் முகவரி மாற்றம் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் போன்றவைகள் முக்கியமானதாகும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றி வருகிறோம்.
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை 60 வார்டுகளிலும் நிறைவேற்றப்படும். இந்த பகுதியிலிருந்து மாநகரில் பசுமையாக மாற்ற வேண்டும் என்பதற்காக 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டு 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுள்ளன.
புதிய கால்வாய் கட்டுதல் சாலை வசதி தொடங்கப்பட்டுள்ளது. மக்கும் குப்பை மக்காத குப்பை போன்றவற்றை தரம் பிரித்து கொடுத்து பொதுமக்கள் மாநகராட்சி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் நெகிழிகளை பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
தமிழக அரசு உத்தரவு படி மீண்டும் மஞ்சள்பை திட்டம் தொடங்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி 1.50 லட்சம் வழங்கியுள்ளோம். 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் நமக்காக உழைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வழியில் மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என்று உங்களுக்காக பணியாற்றுகிறோம். எந்த குறைகளாக இருந்தாலும் எப்போதும் என்னை தொடர்பு கொண்டும் நேரிலும் தெரிவிக்கலாம்.
தூத்துக்குடி மாநகரம் தொழில்சார்ந்த நகராமாக இருப்பதால் தன்னார்வலர்கள் உள்ளிட்ட தொழில்சார்ந்த எதுவாக இருந்தாலும் தெரிவிக்கலாம் உதவிகள் புரிய வேண்டும் என்றாலும் அனுகலாம். எதுவாக இருந்தாலும் தீர்த்து வைப்பதற்கு நான் கடமை பட்டவனாக உள்ளேன். தமிழக அரசுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளித்து வரும் காலத்திலும் கடந்த காலத்தை போல் முழுமையான ஆதரவு தரவேண்டும். சிறந்த மாநகராட்சியாக உருவாகுவதற்கு என்று தன்னை வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுத்து மேயராக அமர வைத்த பகுதி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என உருக்கமாக ஜெகன் பெரியசாமி பேசினார்.
இதில் பகுதி சபா குழு உறுப்பினர்கள் முன்னாள் கவுன்சிலர்கள் ரவீந்திரன், தங்கம்மாள், ஐசக், அருணகிரி, கணேஷ், மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார், சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர்கள் ராமர், சரவணன், மாநகர வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாலமுருகன், மாவட்ட பிரதிநிதி நாராயணன், போல்பேட்டை பகுதி துணைச்செயலாளர் ரேவதி, போல்பேட்டை இளைஞர் அணி துணை அமைப்பாளர் அல்பட், முன்னாள் கவுன்சிலர்கள் கிங்ஸ்டன், முத்துச்செல்வம், நிர்வாகிகள் அற்புதராஜ், ராஜா, இசக்கி கணேசன், குமாஸ்தா பாலசுப்பிரமணி குமார் வெள்ளையன் சண்முகசுந்தரம், குமார், சுந்தர், அங்கன்வாடி பணியாளர்கள் சுசீலா, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.