வெளிமாநிலத்தில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட 5 டன் எடையுள்ள ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை கடத்தி வந்த இரண்டு நபர்கள் கைது மற்றும் வாகனம் பறிமுதல் செய்த பள்ளிகொண்டா காவல் நிலைய போலீசார் வேலூர் மாவட்டம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ராஜேஷ் கண்ணன் உத்திரவின் பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி இன்று பள்ளிகொண்டா காவல் நிலைய பகுதியில் லாரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்துவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் பேரில் வேலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு , பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடமான பெங்களூர் To சென்னை NH ரோட்டில் கொல்லமங்களம் அருகே இருந்த KA 01 AH 4520 என்ற பதிவு எண் கொண்ட TATA CONTAINER LORRY-யை சோதனை செய்த போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 5 டன் எடையுள்ள ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்தது. இதனை கடத்தி வந்த எதிரிகள் 1)விவேகானந்தன் வ- 36 த/ பெ முருகன் ஓசூர் 2) அரவிந்த் வ 26 த/பெ பழனி ஓசூர் ஆகிய இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து குட்கா பொருட்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதில் சிறப்பாக செயல்பட்டு எதிரிகள் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்த காவல் அதிகாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினர்.
மேலும் இதுபோன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்துபவர் மற்றும் பதுக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்தார்.