தூத்துக்குடி நந்த கோபாலபுரத்தை சார்ந்தவர் பேச்சியம்மாள். இவர் கடந்த 27 ஆண்டுகளாக சிவன் கோயில் முன்பு நடைபாதையில் பூ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் வாடகை பாக்கியிருப்பதாக கூறி கோயில் நிர்வாகம் அரசியல் கட்சியினர்களை வைத்து அவரது கடையை அப்புறபடுத்தி விட்டார்களாம். இந்நிலையில் பேச்சியம்மாள் தனது மகனுடன் தனது இருசக்கர வாகனத்தில் பூக்களை விற்பனை செய்து வந்தார்.
அப்போது கோவில் நிர்வாகி, வாட்ச்மேன் உட்பட 4பேர் அவர்களை அடித்து காயப்படுத்தி, பூக்களை சாலையில் வீசியெறிந்து, அவர்கள் பயன்படுத்தி வந்த இருசக்கர வாகனத்தை அபகரித்து கொண்டார்களாம். இதுகுறித்து பேச்சியம்மாள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தனது பூக்களை சேதப்படுத்தி, வாகனத்தை பறித்தச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.