தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் ஒன்றியக் குழு தலைவர் வசுமதி அம்பா சங்கர் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜ், நாகராஜ், ஒன்றிய குழு துணைத்தலைவர் ஆஸ்கர் முன்னிலையில் நடைபெற்றது.
ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தங்களது பகுதியில் நடைபெற வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்தும், சில பணிகள் நடைபெறும்போது அதிகாரிகள் முறையாக தகவல்கள் கொடுத்து பணிகளை துவக்குவதற்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டை வைத்தனர். அதற்கு பதிலளித்த அதிகாரிகள்: எந்த பகுதியில் பணிகள் நடைபெற்றாலும், உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறினார்கள்.
இதில் ஊராட்சி ஒன்றிய அலுவல் சார்ந்த பணிகள் மற்றும் மாப்பிள்ளையூரணி, உமரிக்கோட்டை, முடிவைத்தானேந்தல், கோரம்பள்ளம், அய்யனடைப்பு, கூட்டுடன்காடு, குமாரகிரி, சேர்வைக்காரன்மடம், தளவாய்புரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற பகுதிகளில் தார்சாலை, பேவர் பிளாக் சாலை, கால்வாய் அமைத்தல், சிமெண்ட் சாலை அமைத்தல், சரள் மேம்பாடு செய்தல் உள்ளிட்ட 34 புதிய பணிகளுக்கான திட்டங்கள் மேற்கொள்வது என 34 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பொறியாளர் தளவாய், ஒன்றிய கவுன்சிலர்கள், தொம்மை சேவியர், அந்தோணி தனுஸ்பாலன், முத்துகுமார், நர்மதா, ஆனந்தி, முத்துமாலை, சுதர்சன், முத்துலெட்சுமி, ஜெயகணபதி, மரியசெல்வி, செல்வபாரதி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியின் வளர்ச்சிக்கான தீர்மானங்கள் அனைத்தும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.