தூத்துக்குடி டீ.சவேரியார்புரம் பகுதியை சேர்ந்த ஜேசுராஜ் மகன் அந்தோணி ஆல்வின் (32) என்பவர் நேற்று (31.10.2022) தனது வீட்டின் முன்பு அவரது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். பின்னர் அந்த இருசக்கர வாகனம் திருடுபோயுள்ளது.
இதுகுறித்து அந்தோணி ஆல்வின் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி தாளமுத்துநகர் கீழ அழகாபுரி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பழனிச்சாமி (26) என்பவர் மேற்படி அந்தோணி ஆல்வினின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வன் வழக்கு பதிவு செய்து பழனிச்சாமியை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 30,000/- மதிப்பிலான இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார்.
கைது செய்யப்பட்ட பழனிச்சாமி மீது தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.