மலேசியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் எந்தவொரு கட்சிக்கோ அல்லது அரசியல் கூட்டணிக்கோ ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. தற்போதைய சூழலில் அங்கு தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.
இதையடுத்து புதிய அணிகளை உருவாக்கி ஆட்சியைப் பிடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.
இந்நிலையில் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் தாம் போட்டியிட்ட தொகுதியில் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்துள்ளது மலேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஹாதிர் முஹம்மத் 1981 முதல் 2003 வரை
24 ஆண்டுகள் மலேசியாவின் பிரதமராக இருந்து மலேசியாவின் தற்போதைய வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.