தூத்துக்குடியில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 17 அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலைசிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அகமது இக்பால் தலைமையில் திராவிடர் கழகம், தமிழர் விடியல் கட்சி, தமி ழக வாழ்வுரிமை கட்சி உள் ளிட்ட 17 அமைப்பினர் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், எஸ்பி பாலாஜி சரவணன் ஆகியோரிடம் கொடுத்துள்ள மனுவில்...
"ஆர் எஸ்எஸ் அமைப்பானது தமிழகத்தில் காலூன்றும் நோக்கத்தில் தூத்துக்குடி உட்பட தமிழகத்தின் பல் வேறு இடங்களில் ஊர்வலம் நடத்த இருக்கிறது. ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மற்றும் பேரணி நடத்துவதற்கு முன்பிருந்த தமிழக அரசுகள் தொடர்ந்து அனுமதி மறுத்து வந்துள்ளன. தற்போதுள்ள திமுக தலைமையிலான தமிழக அரசும் மறுப்பு தெரிவித்திருந்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பானது நீதிமன் றத்தின் மூலமாக வரும் 6ம் தேதி ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி பெற்று இருக்கிறது. இந்நாளில், தூத்துக்குடியிலும் இந்த ஊர்வலம் நடக்கிறது. வட மாநிலங்களில் நடப்பது போன்ற மத வன்முறைகள் தமிழகத்தில் இல்லாமல் இருப்பதற்கு ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் இங்கு செல்வாக்கு இல்லாமல் இருப்பதுதான் காரணமாகும்.
தற்போது தமிழகத்தில் செல்வாக்கு பெறும் நோக்கில் இந்த அமைப்பு நடத்தும் ஊர்வலத்தால் தேவையில்லாத சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.
எனவே தூத்துக்குடியில் இந்த அமைப்பின் ஊர்வலம் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடை விதித்திட வேண்டும் என்று அதில் கூறியுள்ளனர்.
மனு அளிக்கும் நிகழ்வின் போது திராவிடர் கழகம் பால் ராஜேந்திரன், தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி செயலாளர் மாரிச்செல்வம், தமிழ்புலிகள் கட்சி மாவட்ட செய லாளர் தாஸ், மனிதநேய மக்கள் கட்சி ஹசன், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் முகம்மதுஜான், ஆதித்தமிழர் பேரவை கருப்பசாமி, கண்ணன், எஸ் டி மாவட்ட பொறுப்பாளர் காதர்மைதீன், கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்கம் ஜெரோம், தந்தைபெரியார் திராவிடர் கழகம் பிரசாத், மக்கள் அதிகாரம் மைக்கேல், ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் அப்பாஸ், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஜலால், திராவிடர் கழகம் காசி. புரட்சிகர இளைஞர் முன்னணி சுஜித், உத்திரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சுலைமான், அரிச்சந்திரன்,நிர்மலா, ஜெரினாபானு, அஜிஸ், சேக் மற்றும் அமைப்பு நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.