தூத்துக்குடி - ஒரே நாளில் 11 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது.!

 

தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தாறு காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர் மற்றும் கஞ்சா வழக்குகளில் ஈடுபட்ட 4 பேர் உட்பட இன்று ஒரே நாளில் 11 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 249 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 16.10.2022 அன்று கயத்தாறு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சுரேஷ் (20) என்பவரை முன்விரோதம் காரணமாக அவரது வீட்டிற்குள் புகுந்து கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் திருநெல்வேலி மாவட்டம் சாந்திநகர் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் பரமசிவன் (எ) பந்தல்ராஜா (34), கயத்தாறு சுடலைமாடன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் அஜித்கண்ணன் (எ) கண்ணன் (27), கயத்தாறு கோட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர்களான அங்கப்பன் மகன் வெயிலுமுத்து (44), இசக்கி (எ) முருகன் மகன் ஜெயமணிகண்டன் (எ) ஜெயமணி (21), மாரியப்பன் மகன் மாரியப்பன் (19), பாளையங்கோட்டை கணம் பிள்ளை நயனார் தெருவைச் சேரந்த பரமசிவன் மகன் இசக்கிராஜா (27) மற்றும் பாளையங்கோட்டை காமராஜ் தெருவைச் சேர்ந்த ஜெபசிங் ஆசீர் மகன் கிறிஸ்டோபர் மார்ட்டின் ராஜ் (எ) மார்ட்டின் (21) ஆகியோரை கயத்தாறு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கில் 7 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் முத்து,

கடந்த 21.10.2022 அன்று தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியிலுள்ள தனியார் உப்பள கொட்டகையில் இருசக்கர வாகனத்தில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் தூத்துக்குடி இந்திராநகர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் ராம்குமார் (22), தூத்துக்குடி பிரூடி காலனி பகுதியை சேர்ந்த நாகசுந்தர் மகன் பிரதீப்குமார் (22) மற்றும் தூத்துக்குடி தாளமுத்துநகர் தாய்நகரைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் அமிர்தலிங்கம் (எ) லிங்கம் (64) ஆகியோரை தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கில் ராம்குமார், பிரதீப்குமார் மற்றும் சிவலிங்கம் (எ) லிங்கம் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. ஜூடி 

கடந்த 20.10.2022 அன்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாதன்குளம் ரயில்வே கேட் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அவ்வழியாக வந்த காரில் சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா கடத்திய வழக்கில் தூத்துக்குடி ஆவுடையார்புரம் பகுதியை சேர்ந்த சந்தானம் மகன் சந்தனராஜ் (22) என்பவரை செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கில் சந்தனராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க செய்துங்கநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மநாபபிள்ளை ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் திருநெல்வேலி மாவட்டம் சாந்திநகர் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் 1) பரமசிவன் (எ) பந்தல்ராஜா, கயத்தாறு சுடலைமாடன் கோவில் தெருவைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் 2) அஜித்கண்ணன் (எ) கண்ணன், கயத்தாறு கோட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர்களான அங்கப்பன் மகன் 3) வெயிலுமுத்து, இசக்கி (எ) முருகன் மகன் 4) ஜெயமணிகண்டன் (எ) ஜெயமணி, மாரியப்பன் மகன் 5) மாரியப்பன், பாளையங்கோட்டை கணம் பிள்ளை நயனார் தெருவைச் சேரந்த பரமசிவன் மகன் 6) இசக்கிராஜா, பாளையங்கோட்டை காமராஜ் தெருவைச் சேர்ந்த ஜெபசிங் ஆசீர் மகன் 7) கிறிஸ்டோபர் மார்ட்டின் ராஜ் (எ) மார்ட்டின், தூத்துக்குடி இந்திராநகர் பகுதியை சேர்ந்த முருகன் மகன் 8) ராம்குமார், தூத்துக்குடி பிரூடி காலனி பகுதியை சேர்ந்த நாகசுந்தர் மகன் 9) பிரதீப்குமார், தூத்துக்குடி தாளமுத்துநகர் தாய்நகரைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் 10) அமிர்தலிங்கம் (எ) லிங்கம் மற்றும் தூத்துக்குடி ஆவுடையார்புரம் பகுதியை சேர்ந்த சந்தானம் மகன் 11) சந்தனராஜ் ஆகிய 11 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் மேற்படி 11 நபர்களையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 42 பேர் உட்பட 249 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post