தீபாவளி பண்டிகைக்காக பொருட்கள் வாங்குவதற்கு திருப்பூர் கடைவீதிகளில் வட மாநில தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் குவிந்து வருகிறார்கள். போலிசார் இந்தியில் அந்தர் ஜா... ருககு ஜா என்று இந்தி பேசி போக்குவரத்தை ஒழுங்கு படுத்தியது வட மாநில தொழிலாளர்கள் எளிதில் புரிந்து கொள்ள வசதியாக இருந்தது.
திருப்பூர் மாநகரில் பனியன் தொழிலை நம்பி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த பொதுமக்களும், வெளி மாநிலங்கள் சார்ந்த வடமாநில தொழிலாளர்களும் அதிக அளவில் தங்கி பனியன் கம்பெனிகளில் வேலை பார்த்து வருகிறார்கள். தமிழ்நாட்டிலேயே அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நகரங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக திருப்பூர் மாநகரம் திகழ்கிறது. இங்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பனியன் தொழிலாளர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து வசிப்பதாகவும், இதில இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பீகார் , ஒடிசா, மேற்கு வங்காளம் அசாம் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். வட மாநிலங்களில் இருந்து திருப்பூர் வந்து தங்கி பணியாற்றுபவர்கள் சொந்த ஊருக்கு கூட செல்லாமல் குடும்பத்துடன் இங்கு தங்கு பணியாற்றுவது அதிகரித்து வருகிறது. திருப்பூர் மாநகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் அனைத்துமே வட மாநில தொழிலாளர்களின் குடியிருப்புகளாக மாறிவரும் நிலை யை திருப்பூரில் நாம் கண்கூடாக பார்க்கலாம். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் கடை வீதிகளில் இன்று கூட்டம் அலைமோதியது. இன்று மாலை பல்லாயிர கணக்கில் வட மாநில தொழிலாளர்கள் திரண்டு தீபாவளிக்கு பொருட்கள் வாங்குவதற்கு வந்தார்கள். திருப்பூரில் உள்ள முக்கிய கடைவீதிகள் ஆன புது மார்க்கெட் வீதி, பழைய பஸ் நிலையம், காமராஜரோடு, முனிசிபாலிட்டி சந்திப்பு, புது பஸ் நிலையம், பெருமாநல்லூர் ரோடு பகுதிகளிலும் வட மாநில தொழிலாளர்கள் ஆண்கள் பெண்கள் என பெரும் கூட்டமாக திரண்டு புதிய ஆடைகள் மற்றும் அணிகலன்களை வாங்கினார்கள். குறிப்பாக வட மாநிலத்தவர்கள் அணியக்கூடிய வகையிலான கலர்ஃபுல் ஆடைகள் அதிகமாக விற்றுத் தீர்ந்தன. திருப்பூர் மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பனியன் தொழிலாளர்கள் தீபாவளி பொருட்கள் வாங்குவது முடிந்த நிலையில் இறுதி கட்டமாக வட மாநில தொழிலாளர்கள் திரண்டு திருப்பூர் வியாபாரிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பொருட்களை வாங்கி குவித்தார்கள். இதனால் திருப்பூரில் உள்ள கடை வியாபாரிகளுக்கும் சாலையோர வியாபாரிகளுக்கும் வியாபாரம் களை கட்டியது. கூட்டம் அலைமோதியது. முன்னேற்பாடு நடவடிக்கையாக போலீசார் சாலைகளில் தடுப்புகளை அமைத்து இருந்தார்கள். இது தவிர திருப்பூர் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க வந்த வட மாநில இளைஞர்களை இந்தியில் பேசி ஒழுகுபடுத்தினார்கள். வட மாநிலத்தவர் கூட்டமும், போலீசார் தமிழிலும் இந்தியில் மாறி மாறி பேசி போக்குவரத்தை ஒழுங்கு படுத்தியது வட மாநில தொழிலாளர்கள் எளிதில் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருந்தது.