தேசிய ஆயுர்வேத தினத்தில் மத்திய ரிசர்வ் படை வீரர்களுக்கான மருத்துவ முகாம்

த்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்  இயக்குனர் ஆணைப்படி கோவை, திருப்பூர் மாவட்ட சித்த மருத்துவ அலுவுலர்  வழிகாட்டல் படி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அரசு ஆயுர்வேத மருத்துவர்கள் இணைத்து ஏழாவது தேசிய ஆயுர்வேத தினம் கொண்டாடப்பட்டது. 


105 ஆர்.ஏ.எப்., சி.ஆர். பி. எப்.,  வெள்ளலூர் முகாமில் கொண்டாடப்பட்டது. இதில் 105 விரைவு அதிரடிப் படை கமாண்டன்ட் .சஜித் குமார்,  தலைமை மருத்துவ அதிகாரி கே. முஹம்மத் அக்பர் , துணை கமண்டன்ட் வி. ஜெயமாதவன்,  அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வெள்ளலூர்  மருத்துவ அலுவலர்் பாலச்சந்தர் ,  இம்ப்காப்ஸ் துறையின் தலைவர்.  கண்ணன் ஆகியவர்கள் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இவ்விழாவில் ஆயுர்வேத துறையின் சிறப்பு அமசமான பஞ்சகர்மா பற்றி விளக்கப்படம் மற்றும் உருவப்படங்களுடன் விளக்கப்பட்டது. மேலும் ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ள அறுவை சிகிச்சை முறைகள் ( க்ஷார சூத்ரம்) பற்றியும் விளக்கப்பட்டது. மூலிகை தாவரங்கள் மற்றும் ஆயுர்வேத மருந்தின் மூல பொருட்கள் பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கபட்டது. கொரோனா காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுர்வேத மருந்துகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டதுு.

கடுத்ரயம் கஷாயம் விரைவு அதிரடிப் படை வீரர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் ஆயுர்வேத மருந்து முகாம் நடத்தப்பட்டது. இதில் விரைவு அதிரடிப் படை வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்று பயன்பெற்றனர் . இதில் மருத்துவர்கள் பாஸ்கர், பாலகிருஷ்ணன், கவிதா,  மேகலை, பாபு, இந்திரா மற்றும்  சிவதாஸ் மற்றும் மருந்தாளுனர்கள் சிவகுமார், ரேவதி,கனி ஆகியோர் பங்கேற்றனார்.
Previous Post Next Post