விவேகானந்தா பள்ளியில் தீ தடுப்பு செயல்முறை விளக்க பயிற்சி


திருப்பூர் கே செட்டிபாளையத்தில் உள்ள விவேகானந்தா  பள்ளியில் திருப்பூர் தெற்கு தீயணைப்பு மீட்புத்துறை வீரர்கள் சார்பில் தீ தடுப்பு செயல்முறை பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இதில் தீயின் வகைகள் அவை பரவினால் அதை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் செயல்முறை விளக்கம் தந்தனர். 

மேலும் தீ விபத்தினால் காயம் அடைந்தவர்களை எப்படி கொண்டு செல்வது என்றும் விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் வி.மோகன் மற்றும் அவரது குழுவினர் 11 பேர் பங்கு கொண்டு தேசிய மாணவர் படை மாணவர்களுக்கும் மாணவ மாணவியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்தனர்.


 இந்நிகழ்வில் பள்ளியின் துணைத் தலைவர் எஸ் தியாகராஜன் பள்ளியின் மூத்த முதல்வர் டி.மணிகண்டன், முதல்வர் சின்னையா, துணை முதல்வர் ரவி, கல்வி அதிகாரி ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வை நமது பள்ளியில் தேசிய மாணவர் படையின் அதிகாரி சிவக்குமார் வழி நடத்தினார்.

Previous Post Next Post