உலக ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் மற்றும் லயன்ஸ் கிளப் ஆஃப் திருப்பூர் ஏங்கர் இணைந்து நடத்திய "7-வது ஆயுர்வேத தின விழா" திருப்பூர், சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர்.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர்.மோகன்குமார் வரவேற்புரையாற்றினார். மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர்தனம், லயன்ஸ் கிளப் ஆஃப் திருப்பூர் ஏங்கர் தலைவர் நாராயணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். ஆயுர்வேத விழிப்புணர்வு உரையை கோவை, இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் உதவி மருத்துவ அலுவலர் பாபு விளக்கிக்கூறினார்.
இதில் பிரண்டை, முருங்கை, முல் சீதா, பூ மருது, துளசி, கொடுகாபுளி போன்ற மர கன்றுகள் மாணவர்களுக்கு வழங்க பட்டது. ஆயுர்வேத அறுவை சிகிச்சையில் அக்னிகர்ம நெருப்பினால் சுடு சிகிச்சை , பௌத்திரம் மூல நோய்களில் க்ஷார கர்மா சிகிச்சை விளக்கப்பட்டது.
ஆயுர்வேத பஞ்சகர்மாவில் பாத்தி (அப்யங்கம் டேபிள்), பாஷ்ப ஸ்வேதனம் (ஸ்டீம் பாக்ஸ் ), ஷிரோ தாரா , கடி வஸ்தி மாதிரிகள் வைக்கப்பட்டிருந்தது.
காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த மூலிகைகளையும், மருத்துவ உபகரணங்கள்,
சிகிச்சைமுறை, மருந்துகள், சிறப்பு மருத்துவ முகாம் போன்றவற்றை சிக்கண்ணா கல்லூரி மாணவ, மாணவியர்களும், பேராசிரியர்களும் பார்வையிட்டனர். விலங்கியல்துறை மாணாக்கர்கள் மூலிகைப் பொருட்களின் பயன்பாடுகளையும், சிறப்புகளையும் குறிப்பெடுத்துக்கொண்டனர். அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் தசமூலகடுத்ரய கஷாயம் வழங்கப்பட்டது. வெள்ளக்கிணறு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பாஸ்கர் நன்றியுரை கூறினார்.
அரசு ஆயுர்வேத மருத்துவ அலுவலர்கள் டாக்டர்.பாலகிருஷ்ணன், டாக்டர்.கவிதா,டாக்டர்.மேகலை, டாக்டர்.இந்திரா, டாக்டர்.சிவதாஸ், டாக்டர்.ரவி முருகன் மற்றும் மருந்தாளுநர்கள், செவிலியர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் இந்நிகழ்ச்சியை நடத்தினார்கள். சிக்கண்ணா கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் ஒருங்கிணைத்தனர்.