இராமநாதபுரத்தில் முதல் முறையாக தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான குத்து வரிசை பயிற்சி முகாம்


இராமநாதபுரம் சேதுபதி நகரில் உள்ள விக்டரி அகாடமியில் இராமநாதபுரத்தில் முதல் முறையாக பாரம்பரிய வீர விளையாட்டான குத்து வரிசை பயிற்சி முகாம் சனி மற்றும் ஞாயிற்றுகிழமை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது, நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் சுமார் 30 பேர் இதில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்,

இதற்கான பயிற்சியாளர்களாக நெய்வேலியில் இருந்து  ஆசான்.ஞானபிரகாசம் மற்றும் ஓசூரில் இருந்து வந்த ஆசான் லோகநாதன் ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

இதனையடுத்து பயிற்சி பெற்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கும் விழா விக்டரி பள்ளியில் நடைபெற்றது, 

இந்நிகழ்ச்சியில் கேணிக்கரை காவல்நிலைய ஆய்வாளர் ஆடிவேல் மற்றும் விக்டரி அகடாமி பள்ளியின் தாளாளர் மாலதி, நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாஸ்டர் மேத்யு இம்மானுவேல் ஆகியோர் தலைமை வகித்தனர், 

இதில் பயிற்சி பெற்ற மாணவர்கள்  தாங்கள் கற்றுக் கொண்ட குத்து வரிசை பாட முறைமைகளை செய்து காட்டினர், 

இதனை அடுத்து கேணிக்கரை காவல் ஆய்வாளர் ஆடிவேல் அவர்கள் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசியபோது, 

குத்து வரிசை விளையாட்டு சோழர்கள் காலத்தில் விளையாடப்பட்ட விளையாட்டு, தஞ்சாவூர் குத்து வரிசை என்று கூறுவார்கள், வளரும் தலைமுறைக்கு பாரம்பரிய இக்கலையை மீட்டெடுக்கும் வண்ணமாக சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல் இதனை கையில் எடுத்துள்ளார், 

மாணவ மாணவிகள் இதனை பயன்படுத்தி தங்களை தற்காத்துக்கொள்ள நல்ல வாய்ப்பு என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post