திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மழை காலத்தை முன்னிட்டு சேதமடையும் சாலைகள் கால்வாய்கள் ஆகியவற்றை சீரமைப்பதற்காக 32 ஜே,சி,பி,ம் 8 டிராக்டர் உட்பட,மற்றும் 64 வேலையாட்கள் ஆகியவை மண்டல வாரியாக பிரித்து தரப்பட்டன. இவை அந்தந்த பகுதிகளில் நீர்வழிகள், தண்ணீர் செல்லும் கால்வாய்கள் போன்றவற்றை சீர்படுத்தி வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதை முன்னெச்சரிக்கையாக தடுப்பதற்காக பணிகளை மேற்கொள்ளும்.
இந்த நிலையில், இந்த இயந்திரங்களை மேயர் ந.தினேஷ்குமார் பணிகளை துவைக்கி வைத்து போர்க்கால அடிப்படையில் மக்கள் சிரமம் ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்வில் மண்டல தலைவர்கள் பத்மநாபன், கோவிந்தராஜ் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் மண்டல தலைவர்கள் பத்மநாபன், கோவிந்தராஜ் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.