இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில், “ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, உள்துறை மற்றும் வருவாய் துறைகளின் மூலம் சம்பந்தப்பட்டஅதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆணையத்தின் ஆலோசனைகள் ஏற்று தொடர்புடைய துறைகளால் பொருத்தமான ஆணைகளை வழங்குவதற்காக விரிவாக ஆய்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி, அப்போதைய காவல் துறை ஐ.ஜி., சைலேஷ் குமார் யாதவ், டிஐஜி சி. கபில் குமார் சராட்கர், எஸ்.பி. பி.மகேந்திரன், டிஎஸ்பி லிங்கதிருமாறன், ஆய்வாளர்கள் திருமலை, ஹரிஹரன், பார்த்திபன், உதவி ஆய்வாளர்கள் சொர்ணமணி, ரெனிஸ், காவலர்கள் ராஜா, சங்கர், சுடலைக்கண்ணு, தாண்டவமூர்த்தி, சதீஷ்குமார், ஏ.ராஜா, எம்.கண்ணன், மதிவாணன் ஆகிய 17 பேர் துப்பாக்கிச்சூட்டுக்கு பொறுப்பானவர்கள் என அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை அளித்ததை தொடர்ந்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.