15 வேலம்பாளையம் பள்ளிவாசலுக்கு நிரந்த தீர்வு கேட்டு விரைவில் போராட்டம்- அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு அறிவிப்பு

 15 வேலம்பாளையம் பள்ளிவாசலுக்கு நிரந்த தீர்வு கேட்டு விரைவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு அறிவிப்பு

திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள சிடிசி கார்னர் பகுதியில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 15 வேலம்பாளையம்  மசூதியில் தற்போது தொழுகை நடத்தப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் அங்கு தொழுகை நடத்த விடாமல் தடுப்பதற்காக பல்வேறு அமைப்பினர் மட்டுமல்லாது மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளும் தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் எனவே மத வழிபாட்டை பாதுகாக்கும் வகையில் உடனடியாக 15 வேலம்பாளையம் மசூதிக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி விரைவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் நிரந்தர தீர்வு கிடைக்க நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் நல்லதொரு முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.

Previous Post Next Post