ஆடி அமாவாசைக்கு பிறகு பெரிய அமாவாசையாக கருதப்படுவது இந்த மகாலய சர்வ அமாவாசை. இந்த அமாவாசையை முன்னிட்டு உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கரையில் தீர்த்தமாடி கோயில் சுற்றி உள்ள 22 புண்ணிய தீர்த்தமாடி நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு கவனத்தில் கொண்டு சிறந்த தானமான அன்னதானத்தை ஸ்ரீமத் சிவசேதுராம முருகவேல் சுவாமிகள் அன்னதான மடம் சார்பாக அருகில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இவர் தொடர்ந்து அமாவாசை பௌர்ணமி மற்றும் நல்ல நாட்களில் அன்னதானம் செய்து வருகிறார் அது மட்டுமல்லாது
ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி கல்வி படிக்கும் மாணவர்களுக்கு இலவச கல்வி தன்னால் முயன்ற அளவு யாசகம் வாங்கி அதன் மூலம் தர்ம காரியங்கள் செய்து வருகிறார் இதனால் மக்கள் பயனடைவதோடு மட்டுமல்லாமல் மன மகிழ்ச்சியோடும் தன்னார்வ தொண்டர்களாக அவருடன் இணைந்து பணியாற்றுகின்றனர்