தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் சாருஸ்ரீ, மற்றும் துணை மேயர் ஜெனிட்டா முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி குழந்தைகளை அழைத்து வருவதற்கு டிஎம்பி வங்கியின் மூலம் மாநகராட்சிக்கு இரண்டு வேன்கள் தரப்பட்டுள்ளதாகவும், இரண்டு வேன்களை இயக்குவதற்கு டிரைவர்கள் தேவைப்படுவதாகவும்,
இந்த ஓட்டுனர்களை நகர்புற வாழ்வாதார மையம் (CLC) மூலம் பணியமர்த்தி கொள்ளவும், இதற்காகும் ஓராண்டு (17.08.2022 முதல் (16.08.2023 வரையிலான காலம்) செலவுத் தொகை ரூபாய் 3,30,690 கல்வி நிதியிலிருந்து செலவு மேற்க் கொள்ளவும்,
இம்மாநகராட்சி பகுதியான பிஎம்சி பள்ளி அருகில் அமைந்துள்ள கழிவு நீரேற்றம் நிலையத்தில் இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு மாநகராட்சியில் போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் மாவட்ட ஆட்சியரின் தினக்கூலி அடிப்படையில் மனித ஆற்றல்கள், நகர்புற வாழ்வாதார மையம், மூலம் தற்காலிகமாக பம்ப் ஆப்ரேட்டர் பணியிடத்திற்கு ஆட்கள் நிரப்பப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்ப்பட்டது.
நிர்வாக அனுமதியின்படி நகர்புற வாழ்வாதார மையம மூலம் தினக்கூலி அடிப்படையில், துப்புரவு பணியாளர்கள் பள்ளி கழிவறை பராமரிப்பு, தூய்மைப் பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், சூப்பர்வைசர்கள், கணினி இயக்குபவர்கள் என 1100 தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்.
தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையத்திற்கு இடையே சுரங்கப்பாதை அமைப்பதற்கு பதிலாக ரெயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சர் கீதாஜீவன் வழங்கிய கடித அறிவுறுத்தலின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாநகராட்சி இடங்களை கண்டறிந்து பாதுகாக்கவும் தொழில்நுட்ப அலுவலர்கள் நியமனம் செய்தல், போல்பேட்டை 60 அடி சாலையில் 49 லட்சத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும்.
மாநகராட்சி மைய அலுவலகம், மண்டலங்கள் மற்றும் பூங்காக்களில் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றுப வர்களுக்கு ஊதியம் வழங்க ஒப்புதல் அளித்தல் மற்றும் நிர்வாக பணிகளுக்கான அனுமதி அளித்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தி.மு.க மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விலை உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்தும் அதிமுக மாமன்ற கொறடா மந்திரமூர்த்தி தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்