தீப்பெட்டி தொழிற்சாலையில் நாளை ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.!*


தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் நாளை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆளை உரிமையாளர்கள் மற்றும் கோவில்பட்டி தலைமை அரசு மருத்துவமனையில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மகப்பேறு மருத்துவமனை கட்டிட பணியையும் பார்வையிட உள்ளார் 

இந்நிலையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் இன்று முதல்வர் வருகை புரியும் இடங்களை ஆய்வு மேற்கொண்டனர் அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த வருவாய் துறை அமைச்சர்

கோவில்பட்டி சிவகாசி சாத்தூர் உள்ளிட்ட நகர் பகுதிகளிலும் கிராமப் பகுதிகளிலும் தீப்பெட்டி பட்டாசு தொழிலை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்..அத் தீப்பெட்டி தொழிலை நம்பி வாழும் தொழிலாளர், 

உரிமையாளர்களுக்கு பல்வேறு சிரமங்கள் என அவர்கள் மனுவாக வழங்கி உள்ளனர் அதன் அடிப்படையில் நாளை தினம் கோவில்பட்டிற்கு வருகை புரிந்து தீப்பெட்டி ஆலையை முதல்வர் பார்வையிட்டு தீப்பெட்டி தொழிற்சாலை உரிமையாளர் இடம் கலந்து உரையாடி அவர்கள் பிரச்சினை குறித்து கேட்டறியவுள்ளர்...

தீப்பெட்டி தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழில் கொடுப்பது என்பது கஷ்டம் இத்தொழிலை காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை கேட்பதற்காக அவர்களுடன் கலந்துரையாடி இது குறித்து முடிவு எடுப்பதற்காக நாளை முதல்வர் வருகை தர உள்ளார் என வருவாய்துறை அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார்.

Previous Post Next Post