ஓட்டப்பிடாரத்தில் வ உ சி யின் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.!


வ.உ. சிதம்பரனார் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்...

கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனாரின் 151 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் கொண்டாடப்பட்டது. ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி பிறந்த இல்லத்தில் அவரது சிலைக்கு மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், ஆகியோர் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் 30  பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவும் 11 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி ஓய்வூதியமும் என மொத்தம் 41 பயனாளிகளுக்கு 5 லட்சத்து 31ஆயிரம் 880 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

இதனை தொடர்ந்து வ.உ.சி யின் பேத்தி செல்விக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.

Previous Post Next Post