பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் டூவிபுரம் பகுதியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சண்முகநாதன்
திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றறை ஆண்டுகள் ஆகிறது திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்திற்கு ஏதாவது புது திட்டத்தை ஸ்டாலின் கொண்டு வந்துள்ளாரா இல்லை.
அதற்கு மாறாக பழிவாங்கும் நோக்கில் முன்னால் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் மூலம் சோதனை நடைபெறுகிறது. முன்னால் அமைச்சர் வேலுமணி வீட்டில் ஒருமுறை, இரண்டு முறை அல்ல 5 முறை சோதனை நடைபெற்றது.
லஞ்ச ஒழிப்பு சோதனையில் எடுத்ததை காட்ட முடியுமா அதிமுகவின் மீது பொய் வழக்கு போடுவதற்காகவே இந்த ரைடு நடைபெறுகிறது என குற்றம்சாட்டிய அவர்
இன்று திமுக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் கீதா ஜீவன் , அனிதா ராதாகிருஷ்ணன் என பல்வேறு அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது ஊழல் செய்த அமைச்சர்களை அருகில் வைத்துக் கொண்டு ஸ்டாலினால் எப்படி தமிழகத்தில் நல்ல ஆட்சி தர முடியும் என்றும்
அதிமுக மட்டும் தான் மக்களுக்காக போராடுகின்ற ஒரே இயக்கம் மற்ற எந்த கட்சிகளும் மக்களுக்காக போராடவில்லை என்றார்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கபட்டது. கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் சின்னதுரை, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட துணைச்செயலாளர் சந்தனம், இணைச்செயலாளர் செரினா பாக்கியராஜ், மாநில மருத்துவ அணி துணைசெயலாளர் ராஜசேகர்,
வக்கீல் அணிசெயலாளர் சேகர், துணைச் செயலாளர் சரவணபெருமாள், முனியசாமி, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்ஜெபக்குமார், மாணவரணி செயலாளர் பில்லா விக்ணேஷ்,
முன்னாள் நகரமன்ற தலைவர் ஹென்றி தாமஸ், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ் மற்றும் ஜோஸ்வா அன்பு பாலன்,
இலக்கிய அணி செயலாளர் நடராஜன், தொழிற்சங்க செயலாளர் ராஜா, ஓன்றிய செயலாளர்கள் ராஜ்நாராயணன், அழகேசன், காசிராஜன், பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், முருகன், சேவியர், ஜெய்கணேஷ், நட்டாளமுத்து,
பகுதி இளைஞர் அணி செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், துணை செயலாளர் டைகர் சிவா, எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் ரமேஷ்கிருஷ்ணன், அதிமுக எதிர்க்கட்சி கொறடா மந்திரமூர்த்தி,
கவுன்சிலர்கள் பத்மாவதி, வெற்றிச்செல்வன், வட்ட செயலாளர் சொக்கலிங்கம், உலகநாத பெருமாள்,முருகன், அருண்குமார், மற்றும் நிர்வாகிகள் பாலாஜெயம் சகாயராஜ், சாம்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.