திருப்பூரில் வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் வ.உ.சி,, பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருப்பூர் புது பஸ் ஸ்டாண்டில், வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் வெள்ளாளர் உறவின்முறை சங்கங்கள் இணைந்து நடத்திய சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 151 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. 

இந்த விழாவினை முன்னிட்டு, காலையில் திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., பங்கேற்று வ.உ.சிதம்பரனார் உருவப்படத்துக்கு மலர் மரியாதை செய்து இனிப்புகளை வழங்கினார். 

மதியம் திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., க.செல்வராஜ் பங்கேற்று வ.உ.சி., படத்துக்கு மலர் மரியாதை செய்து அன்னதானம் வழங்கினார். 

இந்த விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. 

இதில். ’’வ.உ.சி., பிறந்தநாளை தேசிய வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்டும். திருப்பூர் புதிய பேருந்து நிலையத்துக்கு வ.உ.சி., பெயர். வ.உ.சி., 150 வது பிறந்த நாளை முன்னிட்டு கோவை மத்திய சிறையில் 150 அடி உயர வ.உ.சி., சிலையை உடனடியாக அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

விழாவிற்கு மாநில தலைவர் அண்ணா சரவணன், மாநில செயலாளர் தங்கல் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 

முன்னாள் கவுன்சிலர்கள் பி.கே.எம்.முத்து, கனகராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த விழாவில் மாவட்ட தலைவர் சுபிராஜ் முருகேசன், மாவட்ட செயலாளர் பா.அன்பரசன் மாநகர செயலாளர் சிவா, துணை செயலாளர் ராமமூர்த்தி, மணிகண்டன், ரமேஷ், ரகுநாத், செந்தில், ரதீஷ், முத்துராஜ், இளையராஜா, ஜெகன், அய்யப்பன் உள்பட பலர் பங்கேற்றனர். 

Previous Post Next Post