ஊட்டச்சத்தை வலியுறுத்தி சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு--2 சார்பாக செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரை ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் பல விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறார்கள்.

அதன்படி நடுவச்சேரி கிராமத்தில் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலையில் வீடு வீடாக சென்று இயற்கை சார்ந்த உணவுகளை உட்கொள்ளும் போது உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கொடுத்தும் . மாணவ செயலாளர்கள் அருள்குமார், அரவிந்தன், ரமேஷ், கோவிந்தராஜ், பூபதிராஜா ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு நடனம், நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

 முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனி,  ஊராட்சி மன்ற உறுப்பினர் முருகேசன்,  நவின்பிரபு மற்றும் ஏராளமான  பொதுமக்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

Previous Post Next Post