திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதி, நொய்யல் ஆற்றின் குறுக்கே தரைப்பாலத்தில் பல நாட்களாக அகற்றப்படாத குப்பை கழிவுகள் மலைபோல் தேங்கி இருந்தன.
இதனால் அப்பகுதியில் கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், பழனியம்மாள் மாநகராட்சி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அந்த வழியாக காரில் வந்த, திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.செல்வராஜ் மலைபோல் குவிந்து கிடந்த குப்பைக் கழிவுகளை கண்டதும், காரில் இருந்து இறங்கினார்.
பின்னர் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு அந்த இடத்திற்கு வரவழைத்து உடனடியாக குப்பைக் கழிவுகளை அகற்ற அறிவுறுத்தினார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், குப்பைகளை உடனடியாக அகற்றினர். எம்.எல்.ஏ.,வின் இந்த செயல் பொதுமக்களிடையே பாராட்டை பெற்றது