லிஸ்பான் - இந்தியாவை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து உடனடியாக அவர் சான்டா மரியா மருத்து வமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்குகுழந்தை பராமரிப்பு பிரிவில் மருத்துவர்கள் பற் றாக்குறை காரணமாக சா பிரான்சிஸ்கோ சேவியர் மருத்துவமனைக்கு மாற் றப்பட்டுள்ளார்.
மருத்துவமனை செல்லும் வழியில் அந்த பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள் ளது. மருத்துவமனைக்கு வந்த உடன் அவருக்கு அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்துள்ளது. தீவிர சிகிச்சை பிரி வில் அனுமதிக்கப்பட்ட 'அந்த பெண் கடந்த சனிக் கிழமை உயிரிழந்தார்.
முன்னதாக போதிய மருத்துவர்கள் இல்லாததால் அவசர கால மகப்பேறு சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்ற திட்டத்தை அந்நாட்டின் சுகாதார துறை அமைச்சர் மார்தா டெமிடோ கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் மருத்துவர் கள் பற்றாக்குறை காரணமாக இந்திய கர்ப்பிணி உயிரிழந்ததால் அவர் மேலும் எதிர்ப்பு மற்றும் விமர்சனங்களை எதிர் கொண்டார். இதனை தொடர்ந்து தனது சுகாதார துறை அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.