தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஹென்றி, மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் வக்கீல் வீரபாகு,
ஒன்றிய செயலாளர் காசிராஜன், முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் சேகர், துணை செயலாளர் சரவணபெருமாள், மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் ராஜ்சேகர், மாவட்ட இலக்கிய அணி செயலளார் நடராஜன்,
இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், ஜோஸ்வா அன்பு பாலன், மாணவரணி செயலாளர் விக்னேஷ், சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், தகவல் தொழிநுட்பப் பிரிவு செயலாளர் அருண்ஜெபக்குமார்,
பகுதி செயலாளர்கள் ஜெய்கணேஷ், பொன்ராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், கோமதிமணிகன்டன், வட்டச்செயலாளர் திருச்சிற்றம்பலம், வக்கீல் முனியசாமி,
கவுன்சிலர்கள் மந்திரமூர்த்தி, வெற்றிச்செல்வன், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சுடலைமணி, நிர்வாகிகள் மாரியப்பன், விஜயன், மற்றும் நிர்வாகிகள் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைப்பு கழகம்
தூத்துக்குடி அண்ணா 114வது பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், தலைமை பேச்சாளர் கருணாநிதி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ராஜாராம், முன்னாள் தொகுதி வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன்,
முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச்செயலாளர் ஞான்ராஜ், இணை செயலாளர் ஞாயம் ரொமால்ட், மாவட்ட ஜெ பேரவை மூர்த்தி, மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் ஞானபுஷ்பம், வடக்கு மாவட்ட தலைவி சாந்தா, மாவட்ட பிரதிநிதி ஜான்சிராணி, மீனவர் சங்க பிரதிநிதிகள் ரூஸ்வெல்ட், கிளமென்டஸ், ஜெனோபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.