திருப்பூர் பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியும் திருச்சி கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியும் இணைந்து மாணவர்களிடையே பல்வேறு நுண்கலைகளை நான்காண்டு பாடத்திட்டம் கொண்ட வகுப்புகளாகக் கற்றுக் கொடுத்து வருகின்றது.
அந்த வகையில் நம் நாட்டின் பாரம்பரியக் கலையான பரதநாட்டியக் கலையை ஒரு வருடமாகக் கற்று தேர்விற்குத் தயாரான மாணவிகளுக்கு முதலாமாண்டு நடனத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வின் கண்காணிப்பாளர்களாகப் பொள்ளாச்சியைச் சேர்ந்த நடனப் பள்ளி ஆசிரியை வல்சா, கலைக்காவிரி கல்லூரியின் துணை மைய பொறுப்பாளர் ஜெரோம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்குத் தேர்வு நடத்தினர்.
இத்தேர்வில் மாணவிகள் நடன அபிநயங்களை சிறப்பாகச் செய்து தேர்வுக் கண்காணிப்பாளர் வியப்படையச் செய்தனர். பரதநாட்டியத்தை ஆர்வத்துடன் கற்று முதலாமாண்டு தேர்வினைச் சிறப்பாக முடித்த மாணவிகளையும் அதற்கு உறுதுணையாக இருந்த நடன ஆசிரியை ஸ்டெல்லாவையும், மாணவிகளையும் பள்ளியின் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர். சிவகாமி, இயக்குநர் சக்தி நந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி சக்தி நந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.