வேலூர் மாவட்டத்தில் இன்று நடக்கவுள்ள விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை 125 சிசிடிவி கேமராக்களை கொண்டு கண்காணிக்கபடும் என்ஹவும், மேலும் 10 வீடியோ கேமராக்களுடன் நேரடியாக சென்று கண்காணிக்கபடும். சட்டம் ஒழுங்கு பாதிக்கபடும் படி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஷ் கண்ணா பேட்டி அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நாளை நடக்கவுள்ள நிலையில் அதற்கான கண்காணிப்பு கட்டுபாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஊர்வலப் பாதையில் 125 கண்காணிப்பு கேமராக்ள் மூலமும், 10 வீடியோ கேமரா மேன் களை கொண்டும் கண்காணிக்கபடுகிறது.
இந்த காட்சிகள் அனைத்தும் காவல் கண்காணிப்பாளர் கட்டுபாட்டு அறைக்கு வந்துவிடும்.
மேலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 62 நபர்களை வருவாய் கோட்டாச்சியர் முன்னிலையில் ஆஜர்படுத்தி உறுதி கடிதம் பெறப்பட்டுள்ளது சட்டம் ஒழுங்கு பாதிக்கபடும்படி செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என கூறினார்
வேலூர் வெங்கடேசன்